பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் முழுமையாக துரோகம் செய்திருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம்.

modi 350 copy copyநாட்டின் பொருளாதார அடிப்படைகளுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில் களில் ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கை யிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப் பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட முழுமையாக முடமாக்கி இருக்கிறது.அந்நிய நேரடி முதலீடு நம் பொருளாதாரத்தின் அனைத்துத் துறை களுக்கும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது. அந்நிய நேரடி முதலீடு கிட்டத்தட்ட இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை கொல்லைப்புற வழியாக முழுமையாகக் கைப்பற்றக்கூடிய விதத்தில் நுழைந்திருக்கிறது.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறை நான்கு கோடிக்கும் மேலான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை அளித்து வந்தது. சமீபத்தில் சில்லரை வர்த்த கத்தில் சர்வதேச பகாசுரக் கம்பெனியான வால்மார்ட் - இந்தியாவில் செயல்பட்டுவந்த ஃபிளிப்கார்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதானது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய மூலதன நுழைவினை சட்டப்பூர்வமானதாக மாற்றி இருக்கிறது.

கடன் வலை

நாட்டின் விவசாய நெருக்கடி மிகவும் அச்சம் தரத்தக்க அளவிற்கு மிகவும் மோசமாகி இருக்கிறது. கிராமப்புற ஏழை மக்களின் உண்மை ஊதியம் உயிர் வாழ்வதற்குரிய தேவை என்ற அளவைவிட மிகவும் கீழான நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நம் விவசாயிகளது விளைபொருள்களுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்து, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்போம் என்று ஆட்சியாளர்கள் அளித்திட்ட உறுதிமொழியை அமல் படுத்த மறுப்பது, பல லட்சக்கணக்கான விவசாயிகளை தாங்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன்வலையில் சிக்கி, வெளிவர முடியாது தற்கொலைப் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

பெரிய கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்திடும் அதே சமயத்தில், விவசாயிகள் வாங்கிய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது. அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்ஈட்ட வழிவகுத்துத் தந்திருப்பதன் காரணமாக, நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அச்சம் தரத்தக்க அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2017இல் நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் வளத்தில் 73சதவீதம், மக்கள் தொகையில் வெறுமனே 1 சதவீதமாக இருப்பவர்களால் வளைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.நாட்டின் வளங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘கூட்டுக் களவு முதலாளித்துவம்’ ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்ப்பரேட்டுகளால் பெறப்பட்ட கடன்கள், அநேகமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள், திருப்பி வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருக்கின்றன.

மதவெறி

மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமை யில் ஒற்றுமை காணும் மகத்தான பண்பின் மீது மதவெறித் தீயைத்தொடர்ந்து விசிறிவிடுவதன் மூலம் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறு பான்மையினர் மீது கொலைபாதகத் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘பசுப்பாதுகாப்பு’ மற்றும் ‘ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள்’ என்ற பெயர்களில் கொலை பாதகக் கூலிப்படைகள் அமைக்கப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், யாருடன் நட்பு கொள்ள வேண்டும் போன்றவற்றைத் திணித்துக் கொண்டிருக் கிறார்கள். மதவெறி நஞ்சு, நம் சமூகத்து மனிதர்களின் சிறப்பியல்புகளையே இழக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இளம் சிறுமிகள் மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு கள் இவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மீது

பகுத்தறிவாளர்கள் மீதான தாக்குதல் களும் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மதவெறி அடிப்படையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மீதான தாக்குதல்களும் ஏவப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றை, இந்து புராணங்களில் கூறப்படும் புனைவுகளுக்கேற்ப மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற தெய்வ ஆளுகை சார்ந்த பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றி மக்கள் மீது திணிக்கிறார்கள். அனைவரும் ஒன்றுபட்டு அனைவருக்குமான வளர்ச்சி யைக் கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கடந்த நான்காண்டு களில் தலித்துகள் மற்றும் மதச் சிறுபான்மை யினர் போன்றவர்களை இதர மக்கள் திரளினரிடமிருந்து ஒதுக்கி வைத்திடும் விதத்தில் இந்துத்துவா தாக்குதல்களை அதிகரித்த வேலையையே செய்துள்ளார்கள்.

அனைவருக்குமான வளர்ச்சியா?

கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசாங்கம் சமூகநலத்திட்டங்களுக்கு அளித்து வந்த செலவினங்களைக் கடுமையாக வெட்டிக் குறைத்திருப்பதையும் அதன்மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நேரடியாகவே பாதிக்கப் பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கான செலவினத்தை உயர்த்திடுவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், மாறாக, நடந்திருப்பது என்ன?

2014-15ஆம் ஆண்டில் 0.55 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 0.45 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், 2014-15இல் 4.1 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 3.6 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது.நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் மற்றும்கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும் என்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் படாடோபமாக தம்பட்டம் அடிக்கப்பட்ட போதிலும், எதார்த்த நிலைமைகள் இதற்கு நேரெதிராக இருக்கிறது.

தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு பட்ஜெட்ஒதுக்கீடு, 2014-15இல் 10 ஆயிரத்து 892 கோடி ரூபாய் களாக இருந்தது, 2018-19ஆம் ஆண்டிற்கு 7 ஆயிரம் கோடிரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது 36சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பிடங்களில் பத்தில் ஆறில் தண்ணீர் வசதி கிடையாது என்று 2015-16ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு ஸ்தாபனத்தின் ஆய்வறிக்கைகாட்டியிருக்கிறது. இவ்வாறு இந்த முழக்கங்கள் அனை த்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ ((‘jumlas’) எனப்படும் பித்தலாட்ட வாக்குறுதிகளே யாகும்.அதேபோன்றே, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் போது மானவை அல்ல. இவற்றில் மிகவும் மோச மானவை, தலித் மற்றும் பழங்குடியினரின் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளாகும். துணைத்திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் முற்றிலும் போதுமானவையல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

கடந்த நான்காண்டுகளில் நாடாளுமன்ற ஜன நாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகளே செயலற்றதாகக் குறைந்துவிட்டது. அரசாங்கம் தான் செய்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது. முன்னெப்போதும் கேள்விப்படாத பல விஷயங்கள் நடந்து கொண் டிருக்கின்றன. எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் விவாதத்திற்கு அனுமதித்திட வில்லை.

மாநிலங்களவையின் விவாதங்களி லிருந்து தப்பிப்பதற்காக பல சட்டமுன் வடிவுகளை நிதி மசோதாவுக்குக் கீழே கொண்டு வந்து விட்டனர். (நிதி மசோதா என்ற பெயரில் கொண்டு வரப்படுபவை மாநிலங்களவைக்கு விவாதத்திற்கு வைக்கத் தேவையில்லை) தேர்தல் ஆணையம் போன்ற பல அரசமைப்புச்சட்ட அதிகாரக் குழுமங்கள் தங்களுடைய பங்களிப்பு களின் மூலமாக கேள்விக்குறியானவைகளாக மாறியிருக்கின்றன. இதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மக்களின் முன் தேர்தல் ஆணையத்திற்குரிய நம்பகத்தன்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். நாட்டி லுள்ள அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் அளிப்பதுடன் பணத்தை வாரி இறைப்பதன் மூலமும் பாஜக கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் பீகாரில் தேர்தல்களில் தோல்வி அடைந்த பின்னரும் ஆட்சிகளை குறுக்கு வழியில் அமைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன.

மக்களுக்குப் பதில் சொல்லும் விதத்திலும், ஊழலற்ற விதத்திலும் அரசாங்கங்களை அமைப்போம் என்று அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டிருக் கிறது என்று பிரதமர் அடிக்கடி பேசிய போதிலும், இதுநாள் வரையிலும், 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டு, 2014 ஜனவரியில் அறிவிக்கை அளிக்கப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்திட வில்லை. ஊழல் தடுப்புச்சட்டம் 2016இல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலமாக பலவீனப்படுத்தப்பட் டிருக்கின்றன. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்களைப் பாதுகாத்திடும் சட்டம் (The Whistle Blowers Protection Act) இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பலர் ஊழல் புரிந்த கயவர்களால் உயிர்களை இழந்துள்ளார்கள்.

மோடி அரசாங்கம் குறைதீர்க்கும் சட்டமுன்வடிவு (Grievance Redressal Bill), தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்துவதில் தோல்வி அடைந் திருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தில் (Central Information Commission) மொத்தமே 11 ஆணையர்கள்தான். இதில் நான்கு பணி யிடங்கள் காலியாக இருக்கின்றன. 2018இல் அதன் தலைவர் உட்பட நான்கு பேர் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவற்றின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக மாற்றிட அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது. மோடி அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் கடுமையான மாற்றங்களைச் செய்து, அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியிருக்கிறது.

தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பெரிய அளவிற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குக் கணக்குச் சொல்வதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை மூடிமறைத்திடும் விதத்தில் சட்டத்தை இயற்றியிருக்கிறது. இவற்றையெல்லாம் நிதிச் சட்ட மசோதா மூலம் நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள். இதன் மூலம் அரசியலில் பொதுவாகவும், தேர்தலில் குறிப்பாகவும் பணத்தை வாரியிறைப்பதை சட்டப்பூர்வமாகவே மாற்றிவிட்டது.

‘தூய்மை பாரதம்’திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பிடங்களில் பத்தில் ஆறில் (10இல் 6இல்) தண்ணீர் வசதி கிடையாது என்று 2015-16ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இவ்வாறு இந்த முழக்கங்கள் அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட பித்தலாட்ட வாக்குறுதி களேயாகும்.

‘சீத்தாராம் யெச்சூரி’ கட்டுரையிலிருந்து

Pin It