திராவிடர் இனத்தின் மீட்பர் பார்ப்பன வேத, இந்து மத எதிர்ப்பு இயக்கமான பெளத்தம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகின் முதல் நிலை பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளான பார்ப்பனியம், பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரு வன்முறையால் ஒழித்து கட்டப் பட்டது.

தென்னகமாம் திராவிடர் நாட்டில் பார்ப்பன வேத மதமான இந்து மதம் கேட்பாரற்ற பண்ணைகளாக, வல்லான்  வகுத்ததே வாய்க்கால் என்ற தன்மையில் திராவிட இன பெருமக்கள் மீது வேத வாழ்வியல் பண்பாட்டை தினித்து படுகுழியில் தள்ளியது. இதனை எதிர்க்கத் தோன்றிய பார்ப்பன வேத மத எதிர்ப்பாளர்களை, இயக்கங்களை பார்ப்பனர்கள் தங்களின் தேர்ந்த சூழ்ச்சியால், வன்முறையால், படுகொலையால் அழிந்து போனது.

விடுதலை இந்தியாவில் அண்ணல் காந்தியடிகள் வரை பார்ப்பன பயங்கரவாதிகளால் அழிந்தவர்கள். விரித்தால் பட்டியல் நீளும்! இந்நிலையில் தோழர் பெரியார் 1925 –ல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றிவித்து 50 ஆண்டுகள் தன்னையும், தன்னுடைய தன்னல மறுப்புத் தொண்டர்களையும் துணையாகக் கொண்டு பார்ப்பன வேத இந்து மத வாழ்வியலுக்கு எதிராக திராவிடர் வாழ்வியல் பண்பாட்டை முன்னிறுத்தி, திராவிடர் இன மக்கள் ஏற்கும்படிச் செய்ய, பழுத்த முதுமையான 95 வயது வரை பேசியும், எழுதியும் போராட்டங்களை நடத்தியும் நமக்காவே உழைத்தார்.

உலகில் எந்த ஒரு சீர்திருத்த இயக்கமும் அதன் தலைவரும் பெறாத வெற்றிகள் பலவற்றை (கொள்கைகளை) தன் வாழ்நாளிலேயே கண்டவர் கலகக்காரர் தோழர் பெரியார்.  அவரது கொள்கை வழி நின்று அவரின் பெரு உழைப்பையும், வேத இந்து மத எதிர்ப்பு கருத்துகளையும் தன் வாழ் நாள் முழுவதும் எழுச்சியான எழுத்துகள் மூலம் இளைஞர்களுக்குக் கொண்டு சென்ற தோழர் சங்கமித்ரா அவர்களின் கருத்து கருவூலத்திலிருந்து ஒரு கட்டுரை.

தமிழ்நாட்டில் இராணுவங்கள் சாதிக்க முயற்சிக்காததை பெரியார் சாதிக்க முயற்சித்து வெற்றி கண்டார்.  இராணுவங்கள் செய்யாததைச் செய்யமுடியாததை, பெரியார் செய்தார். செய்ய முடிந்தது. இந்தியப் பெரும்பரப்பில் பேரணி நடத்திய ராணுவங்களின் எண்ணிக்கை, அவைகளின் தன்மை, சாதனை, அவை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்திய  விளைவுகள், ஆகிய அனைத்தையும் ஒருசேர எண்ணிப் பார்க்கின்றவர்களால் தான், பெரியாரின் சாதனைகளை சரியாக கணக்கிட்டு, மதிப்பிட்டு பாராட்ட முடியும்.

இதற்கு சமுதாய ஸ்மரணையும் [Social Consciousness] அகன்ற  பார்வையும் வேண்டும், கணக்கிடவும் பாராட்டவுமே அவை வேண்டும் என்றால் - சாதனைகளைக்குவிக்க, அவை எத்தனை பெரிய அளவில் வேண்டும் என்பதை விவரிக்கவே அவசியம் இல்லை.

பேரணி நடத்திய ராணுவங்கள்

இந்தியப் பெரும் பரப்பில் பேரணி நடத்திய இராணுவங்கள் அலக்ஸாந்தர் காலந்தொட்டுத் தொடங்கியது. அவர்களுக்கு முன்னரே ஆரியர்கள் பெருங்கூட்டத்தினராய் - அதே கைபர் கணவாய் வழியாக நுழைந்தும் கூட, அவர்கள் இராணுவம் என்று அழைக்கப்படும் அளவுக்குக் கட்டுப்பாடும் நாகரீகமும் அற்ற காட்டுமிராண்டிகளாக இருந்தனர். எனவே இராணுவம் என்று இந்திய மண்ணில் நுழைந்தது அலக்ஸாந்தரின் இராணுவமே. இந்தப் புராதன இராணுவத்திற்கு - சாம்ராஜ்ய விஸ்தரிப்பு என்ற ஒரே நோக்கமே இருந்தது.

அந்தநாளில் கொடிகட்டிப்பறந்த ரோம, கிரேக்கப் பேரரசுகளைப் போன்ற ஒரு விசாலப்பேரரசை நிறுவுவது என்ற குறுகிய நோக்கமே இருந்நது. இதை ஏன் குறுகிய நோக்கம் என்கிறோம் என்றால்– ஆயிரக்கணக்கான மைல் பரப்பில் அமைந்தாலும் வேற்று மனிதர்களை அரசியல் ரீதியில் அடிமையாக்குவது என்ற அந்த அளவு நோக்கமே அந்த இராணுவத்திற்கு இருந்தது. செங்கிஸ்கான் தலைமையில் – மங்கோலிய முஸ்லிம் பேரரசாக இந்திய மண்ணில் பரவிய அந்த இராணுவத்திற்கும் அதே எண்ணம்தான். கோரி முகமதுவின் தலைமையில் மீண்டும் மீண்டும் சோமனாதபுரத்துப் பார்ப்பனக் கோவில்களைத் தாக்கிய இராணுவத்திற்கும் –நியாயமான சாம்ராஜ்ய ஆசைகூட இல்லாமல் கொள்ளையிடல் என்ற இன்னும் குறுகிய நோக்கமே இருந்தது.

இமயவரம்பன் சேரன் செங்குட்டுவனும், கடாரங்கொண்ட சோழனும்கூட, ஏதோ, அஸ்வமேத யாகக் குதிரைக்கு பதிலாகத் தாமே ஊர்வலம் வந்ததுபோல வந்தார்களே ஒழிய, சாமராஜ்ய விஸ்தரிப்போ, ஆக்கிரமிப்பு எண்ணங்களோ அவர்களுடைய படையெடுப்பில் இருந்ததாக நமக்குத் தெரியவில்லை.

நிரந்தரப் போர்க்களம்

சேரர்களும், சோழர்களும், கீழைச்சாளுக்கியர்களும், மேலைச்சாளுக்கியர்களும், ராஷ்டிர கூடர்களும் பாமினி சுல்தான்களும் மீண்டும் மீண்டும் மோதியதால் ஆறுகளால் சூழப்பட்ட தீவு போன்ற ரெய்ச்சூர், ஒரு நிரந்தரமான போர்க்களமாக இருந்தது என்று நீலகண்டசாஸ்திரி, தென்னிந்திய சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

கருணாகரத் தொண்டைமானின் கலிங்கப்போரும், இராஜேந்திர சோழனின் வாதாபி போரும், சரித்திரமுக்கியத்துவத்தோடு, தென்னாட்டுப் போர்வலிமையை வடநாட்டுக்கு அறிமுகப்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இவைகளைப்போல பானிபட்டு யுத்தங்களும், பிளாஸியுத்தமும், ஆர்க்காட்டுப்போரும், பல முக்கியமான திருப்பங்களுக்கு காரணமாக இருந்தன என்பதையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. மாறி மாறி வந்த இராஜவம்சங்களின் வளர்ச்சி – அல்லது வீழ்ச்சிகளினால், தமிழ்நாட்டிலும்கூட மாறுதல் இருந்தது. கிரேக்கப் போர் வீரர்களுடன் சம்பந்தபட்டோ, – படாமலோ, கிரேக்கம் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தது.

முகமது பின் காஸிமின் சந்ததியாகவோ, வேறு வழியிலோ, தமிழ்நாட்டில் முஸ்லீம் ஜனத் தொகை பெருகியது. இப்படி எல்லாம் மாறிய அரசியல் தலைவிதிகளினால் தமிழர் வாழ்வில் புதுமையோ– பெருமையோ சேர்ந்ததா என்றால்  அதுதான் இல்லை. அது மிகவும் துக்ககரமான நிலை. அதாவது – நடந்த போர்களில் எல்லாம் பிரச்சினை தமிழன் இழிவு ஒழிப்பு அல்ல. தமிழகம் கண்ட போர்க் களங்களில் எல்லாம் முக்கியப் பிரச்சினை தமிழர் மானம் காக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது அல்லவே அல்ல.

சரித்திரங்கடந்த இழிவு; போர்க்களம் கடந்த கேவலம்!

தமிழனுடைய இழிவு – சரித்திரத்தில் கண்டுபிடிக்க முடியாதபடி, சரித்திரம் கடந்து நின்றது. அது போர்களால் தீர்வு காணமுடியாதபடி போர்க்களம் கடந்து வாழ்ந்தது. அந்த இழிவு தமிழனின் அரசியல், சமூகம், கல்வி, வாழ்வியல், சமயம் முதலிய அனைத்துத் துறைகளிலும், பரவிவேரோடி, புரையோடி ஜீரணமாகி நினைவு தப்பி, தோல் தடித்து, ஸ்மரணை அற்று போகும் அளவுக்கு இருந்தது.

பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனக் கலாச்சாரத்திற்கும் முதலிடம் தந்து, பார்ப்பனர்களை மேன் மக்களாகத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு வாழ்ந்த இழிவே அது. அரசியல் துறையில் பார்ப்பனர்கள், தமிழர்களுக்கு, இராஜகுருக்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது. சமுதாயத்துறையில் ‘சாமி’ என்று அழைக்கவும், வணங்கவும் வேண்டிய சாதியாக, கல்யாணங்களை முன்னின்று மறைவழிகாட்டி நடத்த வேண்டிய மனிதர்களாக பார்ப்பனர்களை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

கல்வித்துறையில், சாத்திரங்களையும் நீதிகளையும், கற்கவேண்டியவர்களும், கற்பிக்க வேண்டியவர்களும் பார்ப்பனர்களே என்று தமிழர்கள் மறுசிந்தனையின்றி ஏற்று நடந்தனர்.

“ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்”

என்று மதுரையில் கண்ணகி வழக்குரைத்து மார்தட்டுவது –பார்ப்பனர்கள் கொடி கட்டிப்பறந்த கொடுமையை கூடவே விளக்குகின்றது. கல்வித்துறையில் பண்டிதர்கள், மகாவித்வான்கள். மகாமகோ பாத்தியாயர்கள் நேற்றுவரை பார்ப்பனர்கள் தான். வாழ்வியல் துறையில் பார்ப்பனர்களே, தமிழர்களுக்கு - கர்ப்பதான மந்திரத்திலிருந்து கருமாதி மந்திரம் வரை சொல்ல வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழர் மூதாதையர்கள் – நரகத்தில் நலிவடைந்து விடாமல்  இருக்க, தமிழர் சந்ததிகள் – பார்ப்பனர்களை வைத்தே எள்ளும் தண்ணீரும் இறைத்தன??.

சமயத்துறையில் சாமிக்கு உயிர் கொடுக்கும் கஷ்டமான வேலையை, தமிழர்களுக்காக பரிவு கொண்டு இன்று வரை செய்து வருகின்றவர்கள் பார்ப்பனர்களே. சங்கராச்சாரியார் சொல்லுகின்றார், பக்தன் விவசாயி கடவுள் கலைக்டர். விவசாயி கலைக்டரிடம் மனு கொடுக்கும்போது அதை எழுதித் தருகின்றவர்கள் தான் பார்ப்பனர் என்று அதாவது கடவுள் என்ற கலெக்டரிடம் தானே எழுதி விண்ணப்பிக்க தகுதி அற்ற, அல்லது கையாலாகாத தற்குறிப்பட்டாளமே தமிழர்கள் என்பதை சங்கராச்சாரியார் சர்டிபிகேட் கொடுத்து உறுதிப் படுத்துகிறார்.

சர்வ ஜீவன்களையும் பாதித்த சாஸ்திரங்களின் கர்த்தாக்கள்!

அதாவது அலக்ஸாந்தரிடம் தட்சசீல மக்கள் மட்டும் அகப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் அகப்படவில்லை என்றாலும், கலிங்கத்துப்பரணி போரில் – கலிங்கத்து மக்கள் மட்டும் அகப்பட்டு கேரளத்து மக்கள் அகப்படவில்லை என்றாலும், மூன்றாம் பாணிபட்டு யுத்தத்தில் – 1763ம் ஆண்டு மக்கள் மட்டும் பாதிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் – பார்ப்பனர் மேற்கொண்ட போரில்லா வஞ்சகப் போரில், நாட்டின் எல்லாப்பகுதி மக்களும் எல்லாகால மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

சூத்திரன் என்றால் – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – கட்ச் முதல்-காமரூபம் வரை எல்லாரும் சூத்திரர்கள் தான்.  கி.மு. ஆயிரத்திலிருந்து இன்றுவரை – இனியும் வர இருக்கும் ஆண்டுகள் உட்பட, முப்பாட்டன், கொள்ளுப்பட்டன் காலத்திலிருந்து, பேரன், கொள்ளுப்பேரன், காலம் வரை எல்லாரும் சூத்திரர்கள் தான். எல்லாருக்கும் பார்ப்பான் அரசியலில் மந்திரி தான்; சமூகத்தில் உயர் சாதி தான் கல்வியில் பண்டிதன்தான்; வாழ்க்கையில் புரோகிதன்தான்.

கோவிலில் பூசாரிதான். இந்தியநாட்டின் அறுபதுகோடி மடையர்கள் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம். ரெய்ச்சூர் போர்க்களத்தில் சமரிடப்பட்டது இந்த பிரச்சினையின்மீது அல்ல; பானிபட்டு யுத்தங்கள் நடந்தது. இந்த இழிவை நீக்க அல்ல; பிளாஸியுத்தத்தில் முடிவு செய்யப்பட்டது – சூத்திர இழிவு நீக்கப்படுமோ - அல்லவா என்பது அல்ல. கலிங்கத்திலும், கோவில் வெண்ணியிலும்,  வீர, தீர, சூர, பராக்கிரமவாதிகள் மோதிக் கொண்டது

நூற்றுக்கு தொண்ணூற்றி ஏழு பேர் பார்ப்பானின் காலடியில் கிடக்கும் கொடுமை அகற்ற அல்லவே அல்ல. மாளவம், கூர்ஜரம், அங்கம், கலிங்கம், என்று அம்பத்தாறு தேசத்து அரசர்கள் மோதியது ஒருநாளும், ஒருகாலத்திலும், ஒட்டுமொத்தமான இந்த சமுதாய இழிவு நீக்கும் பிரச்சினைகளுக்காக இல்லவே இல்லை.

இரத, கஜ, துரக, பாதாதிகள், துவஜா ரோகனம் செய்து, எதிரிகளை துவம்சம் செய்தது எல்லாம் – இதற்காக அல்ல. எல்லாரையும் அடிமையாக்கியவன் யாரிடமும் மாட்டவில்லை எல்லாரையும் அடிமையாக்கின பார்ப்பான், யாரிடமும் அகப்படாமல் இரண்டாயிரம் ஆண்டுகள் இங்கே காலந்தள்ளி  விட்டால்தான் – முட்டாள்கள் நிறைந்த இந்த மண்டலத்தை  அவன் ஞானபூமி என்கிறான்.

கொடுமைகளுக்கெல்லாம் பெரிய கொடுமையை செய்து விட்ட அவனை, யாரும் இன்று வரை கொடுமைப்படுத்தாத காரணம் கொண்டுதான் அவன் இதைப் புண்ணியபூமி என்கிறான். பொய்மை களையே புராண,  இதிகாச , இலக்கியங்களாக எழுதிக் குவித்து, வெற்றியே வாழ்வாக வாழ்ந்து வரும் அவன் – வென்றதெல்லாம்  சத்தியம் என்று பிரகடனப்படுத்த – சத்தியம் வெல்லும் என்று போதை ஏற்றி வருகிறான். போரில்லாமல் போர்க்களம் இல்லாமல், வல்லரசுகளைக் கடந்து, வரலாறுகளைத்தாண்டி, வாழ்க்கை லாபங்களைக் கொள்ளை கொண்டுவரும் இந்த வஞ்சகர்களை, புத்தருக்குப் பிறகு புதிய கோணத்தில் அடையாளம் கண்டு புகம்பவெடிவைத்து தகர்த்த ஒரே மனிதர்-பெரியார்!

பெரியார் என்ற ஒற்றை மனித இராணுவம்

படர்ந்து வேரோடிக் கிடந்த பார்ப்பான நோய்க்கு மருந்து கண்டவர் பெரியார். சரித்திரங்கடந்து போர்க்களம்  கடந்து தமிழர் வாழ்வின் பல்துறைகளிலும் பரவிக்கிடந்த அடிமைத்தனத்திற்கு முடிவு கண்டவர் பெரியார். இந்திய பெரும் பரப்பின் தொண்ணூற்றி முன்று சதவீதமக்களை ஆட்கொண்டு, விழ்த்தி, இரண்டாயிரம் ஆண்டுகள் உணர்வற்ற பிணநிலையில் நிறுத்திச் சுரண்டிய கொடிய மனிதர்களை முறியடித்து – இந்தியாவின் தென்கோடியில் புதிய சரித்திரம் படைத்த ஒற்றை மனித இராணுவம் பெரியார்..

பெரியார் படையில் Artillar யும் அவரே; Infantry யும் அவரே; காலாட்படையும் அவரே; பீரங்கிப்படையும் அவரே; மருந்துத் துறையும் அவரே; வழக்குத் துறையும் அவரே; திட்டத் துறையும் அவரே; ஒற்றர் படையும் அவரே!! இந்திய சுதந்திர  நாள் துக்கநாள்,– இந்திய ஜனநாயகம் மோசடி என்ற அவருடைய அணுகுண்டு பார்ப்பன அரசியலைத் தவிடுபொடியாக்கியது. இனி ஒரு பார்ப்பான் தமிழ்நாட்டில் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பது தோற்ற பார்ப்பான் அமைச்சர் பதவியை தானமாகப் பெறுவது என்ற நிலை அவர் சாதனை. கல்வித் துறையில் அய்ம்பது சதவீத ஒதுக்கீடு ஆணையைச் சுற்றி பார்ப்பனர்கள் அழுது ஒப்பாரி வைக்க நேரிட்டிருப்பது பெரியார் விதைத்த விதை.

காவேரிக் கரையில் கருமாதி மந்திரம் சொன்ன பார்ப்பானர்கள் இன்று அதே மந்திரங்களை ஓத ரிசர்வ் பேங்க் கட்டிடங்களைத் தேடி ??ஓடுவதும் அவர் சாதனைதான். ஆன்மீகத் துறையில் கர்ப்ப கிரகத்தில் விழுந்த பெரியார் வெடிகுண்டிற்குப் பயந்து சுப்ரீம்கோர்ட் சிவலிங்கத்தை பார்ப்பனப் பிரகலாதர்கள் கட்டி அழுவதும் அவர் சாதனைதான். ஒரு மனிதர், ஒரு இராணுவம்,

அணுகுண்டுகளாக வெடித்த ஓங்கார முழக்கங்கள்!

கடவுள் இல்லவே இல்லை! ஆத்மா, மோட்சம், பிதிர்லோகம் மோசடி! நாள், கோள், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டம்! கடவுளைப் பரப்புகின்றவன் அயோக்கியன்! வகுப்புரிமை எனது பிறப்புரிமை! அம்மாடீ! எந்திரத் துப்பாக்கிகளின் தொடர் சூடு! கைக்குண்டுகளின் கன மழை! அணுகுண்டு தாக்குதலின் அமளி! இன்று பட்டொளி வீசிப் பறக்கும் அந்த ஒற்றை மனித இராணுவத்தின் ஒப்புமை இல்லாக் கொடிக்கு நெஞ்சுயர்த்தி வந்தனை செய்யும்போது கண்கள் குளமாகின்றன. ஆனந்தக் கண்ணீர்! ஆத்திரக் கண்ணீருங்கூட!!

தகவல்: பொள்ளாச்சி விஜயராகவன்

Pin It