குழந்தை வளர்ப்பில் நாம் அறிய வேண்டிய சில உளவியல் கூறுகள்

மன அழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்றாலே அது மனதுக்கும், உடலுக்கும் ஒவ்வாத விசயங்களாலேயே ஏற்படும் என்று பலர் நம்புகின்றனர்.  அது தவறு.  Eustress எனப்படும் மன அழுத்தமானது திருமணம், குழந்தை பிறப்பு, வேலை மாற்றம் என வாழ்வில் நல்ல தருணங்களில் ஏற்படக் கூடியது.  Distress  என்பது நெருங்கியவரின் மரணம்? வேலை இழப்பு? காதல் தோல்வி எனப் பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படுவது. இக்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிய சவாலாக இருக்கும்  மன அழுத்தம்? நம் உயிரைக் காப்பாற்றவே உருவானது எனச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் தானே?

couple with child

ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது. ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றி னால், அவன் அதனை எதிர்த்துப் போரிட வேண்டும் அல்லது ஓட வேண்டும். ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மைத் தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.  நம் நரம்பு மண்டலம் புலியைப் பார்த்தவுடனேயே? பலவித மான ஹார்மோன்களை (Adrenaline - Cortisol) சுரக்கச் செய்கிறது.  இவை அவசர நடவடிக்கை எடுக்க வசதி யாக மனிதனுக்குள் சில மாற்றங்களைச் செய்கின்றன.

இதயத்துடிப்பு அதிகரிக்கும்

தசைகள் இறுகும்

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

மூச்சு இரைக்கும்

புலன்கள் கூர்மையாகும்

உடல் ரீதியான இந்த மாற்றங்கள் நம்முடைய வலிமையையும் சகிப்புத் தன்மையையும் கூட்டி, கவனத்தை அதிகரிக்கச் செய்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும்.  மன அழுத்தத்தினால் ஏற்படும் இவ் வகை மாற்றங்கள் உடலுக்கு ஏற்படும் ஆபத்தி லிருந்து (Physical threats ) மிருகங்கள் , திருடர்களின் தாக்குதல், இயற்கைப் பேரழிவு, விபத்து போன்ற நிகழ்வுகள்) ஒரு மனிதனைக் காப்பாற்றவே செயல் படுகின்றன.  புலியிடமிருந்து தப்பித்தவுடன் மன அழுத்தம் குறைந்து, உடல் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். 

இன்றைய காலகட்டத்திலோ நம் உயிருக்கு ஏற்படும் இவ்வகை அச்சுறுத்தல்கள் குறைந்து நவீனகால பிரச்சனைகளான பணத்தேவை, தேர்வு, நச்சரிக்கும் கணவன், மனைவி, வேலைப்பளு, அலுவலகப் பிரச்சனை, பிடிக்காத திருமணம், வேலை போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பல நேரங்களில் உளவியல் அச்சுறுத்தல்களை(Psychological threats) ஏற்படுத்தும் காரணிகளை விட்டு ஒருவரால் தப்பிக்க இயலாது (திருமணம், தேர்வு போன்றவை…)

இப்படி அன்றாடம் ஏற்படும் உளவியல் அச்சுறுத்தல்களால்? மன அழுத்த ஹார்மோன்கள் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.  இப்படி தொடர்ந்து ரசாயனம் மற்றும் நரம்பியல் மாற்றங்களால் பல்வேறு உடல் பாகங்கள் சேதம் அடைகின்றன. இது இன்னும் பல மோசமான விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும்.

ஏன் இவ்வளவு மன அழுத்தம் உங்களுக்கு? இப்படி யாரைக் கேட்டாலும்? பல வெளிக் காரணி களைப் பட்டியல் இடுவார்கள்.  உண்மையில், பல நேரங்களில் வெளிக்காரணங்களால் மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை.  ஒருவர் தமக்குத் தாமே அதிக அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு.  எப்படி?

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் குறுகிய கால மன அழுத்தமானது (மிருகம், திருடன் தாக்குதல், இயற்கைச் சீற்றம்) எல்லா மனிதனுக்குமே ஒரே மாதிரி தாக்கத்தையே ஏற்படுத்தும். இதர வகைக் காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் எல்லா மனிதனையும் ஒரே விதமாகத் தாக்குவதில்லை.  ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சம்பவம், காரணி, மற்றொருவருக்குச் சிறிய தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலர் சிறிய பிரச்சனைக்கே மனம் தளர்ந்து போய் விடுவார்கள்.  சிலரோ, பெரிய பிரச்சனைகளைச் சந்தித்தாலும் அதனை மன உறுதியோடு எதிர் கொண்டு மீண்டு வருவார்கள்.  பிரச்சனை ஒன்றே என்றாலும், அதனை எதிர்கொள்பவரின் மனநிலைக் கேற்ப அதன் விளைவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு  (disruptive mood dysregulation disorder)

குழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு  (DMDD)  பற்றி அலசுவோம்.

எல்லாக் குழந்தைகளுமே, தனக்குப் பிடித்த வாறு விசயங்கள் நடக்கவில்லையெனில், சண்டித்தனம் செய்வது வழக்கமே. பெரும்பாலான குழந்தைகள் கோபம், வருத்தம் போன்ற மோசமான எதிர்மறை மன நிலையுடன் காணப்படுவதும் சகஜமே. அதுவே அடிக்கடி, கடுமையாக விரும்பத் தகாத அளவில் எரிச்சல் மற்றும் கோபத்தை வெளிக் காட்டினால், அது அவர்களது பள்ளி, குடும்ப வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.

 தொடர்ந்து எரிச்சல் மனநிலையிலேயே இருப்பது மற்றும் அடிக்கடி, கடுமையாகவும் பெருங் கோபத்துடனும் சுய கட்டுப்பாட்டை மீறி செயல் படும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இக்கோளாறு இருக்கும். இக்குழந்தைகளுக்குத் தங்கள் உணர்ச்சி களைக் கட்டுபாட்டில் வைத்திருப்பது மிகவும் கடினமான விசயம்.  சிறு வயதிலிருந்தே, தொடர்ந்து எரிச்சல், கோபம் கொள்ளும் குழந்தைகளுக்கு னுஆனுனு தாக்கும் அபாயம் அதிகம்.  (DMDD) பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மனச்சோர்வு மற்றும் பதற்றக் கோளாறுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகம். பொதுவாக பெண்களை விட இது ஆண் களைத் தான் பாதிக்கிறது.

இதன் அறிகுறிகள்:

1. சின்ன விசயத்துக்குக் கோபம் கொண்டு சத்தம் போடுவது, மற்றவருக்கோ அவர்கள் பொருட்களுக்கோ தீங்கு செய்வது.

2. இவர்களின் கோபத்தின் வெளிப்பாட்டுக்கும் அவர்கள் வயதுக்கும் சம்பந்தமே இருக்காது. அதாவது, சின்னக் குழந்தை அழுது அடம் பிடிப்பது அதன் வயதுக்கு உரிய செயலே. வளர்ந்த பின்னரும் அப்படி நடந்துகொண்டால், அது இயல்பற்றதாகி விடுகிறது.

3. சராசரியாக வாரம் மூன்று அல்லது அதற்கும் அதிகமாக, இவர்கள் நிதானமின்றி நடந்து கொள்கிறார்கள்.

4. கோப வெளிப்பாடு இல்லாத நேரங்களிலும், இவர்கள் தொடர்ந்து எரிச்சல், கோபத்துடனே தினந்தோறும் காணப்படுவார்கள். இவர்களின் இந்த மனநிலை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் வெளிப்படையாக தெரிந் திருக்கும்.

இந்த எல்லா அறிகுறிகளும் ஒரு வருடத் துக்கும் மேலே காணப்பட்டு, இடையில் குறைந்த பட்சம் 3 மாதம் இடைவெளியின்றி அறிகுறிகள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்தால்தான் அது சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு என நிர்ணயிக்கப்படும். 

இத்தகைய அறிகுறிகள், ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் வெளிப்படையாகத் தெரிவதோடு, வீடு நண்பர்கள் மற்றும் பள்ளி போன்ற பலதரப் பட்ட சூழல்களுள், குறைந்தபட்சம் இருவேறு சூழல்களிலும் காணப்படுகிறது.  ஏதேனும் ஒரு சூழலிலாவது மிகவும் கடுமையாக வெளிப்பட வேண்டும்.  பெற்றோரிடத்தில் மட்டுமே இவ்வறி குறிகள் காணப்பட்டால், அது  (DMDD)  ஆகாது. 

இக்கோளாறு 6 வயதுக்கு மேல் 18 வயதுக் குள்தான் கண்டறியப்படுகிறது. ஆட்டிசக் கோளாறுகள்பிரிவு குறித்த பதற்றக்கோளாறு (Separation Anxiety Disorders)  தொடர்ந்திருக்கும் மனச் சோர்வு (Dysthymia)  அதிர்ச்சிகரமான மன அழுத்த நோய் (Trauma and stress related disorders) கோளாறுகள் ஏற்படுத்தும் அறிகுறிகளிலிருந்து னுஆனுனு வேறுபட்டு இருக்கும்.  தீவிர மனச்சோர்வு நோய் ஏற்படுத்தும் அத்தியாயங்களின்போது மட்டுமே இவ்வறிகுறிகள் காணப்பட்டால் அது DMDD ஆக இருக்காது.

கண்டறிவது எப்படி?

நடத்தைக் கோளாறுகளான இணக்கமற்ற நடத்தைக் கோளாறு (ODD), இடைவிட்டு வெடிக்கும் கோளாறு  (Intermittent Explosive Disorder - IED) மற்றும் உணர்ச்சிக் கோளாறான ‘பைப்போலார் கோளாறு’ போன்ற மனநலப் பிரச்சனைகள், னுஆனுனு உடன் சேர்த்து ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. 

கோபம், எரிச்சல் முக்கியமாகக் காணப்படும் இடைவிட்டு வெடிக்கும் கோளாறுக்கும் (IED) DMDD க்கும் பல வித்தியாசங்கள் உண்டு. IED உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகள்(Disruptive Impulse control disorders) வகையைச் சேர்ந்த நடத்தை சார்ந்த கோளாறு. 

இவர்கள் மன உளைச்சல் தரும் சூழ்நிலையில் மட்டுமே, அதீத ஆத்திரம் காட்டுவார்கள்.  ஆனால், DMDD மனநிலை, உணர்ச்சி சார்ந்த கோளாறு என்பதால், எப்போதும் எரிச்சல், கோபத்துடன் காணப்படுவார்கள்.ஏற்கனவே பார்த்த கோளாறான, இணக்கமற்ற நடத்தைக் கோளாறின்  (Oppositional defiant Disorder-ODD) அறிகுறிகளும், பாதிக்கப் பட்டவரிடையே காணப்பட்டால், அவர்களுக்கு னுஆனுனு மட்டுமே உள்ளதென அர்த்தம்.

DMDD கோளாறு உள்ள குழந்தைகளுக்கு மேனியா, ஹைப்போமேனியா அறிகுறிகளான, அதீதப் புத்துணர்ச்சி, அதிகத் தற்பெருமைப் பேச்சு, உளப் போராட்டம் அதீத செயலைத் தூண்டும் எண்ணங்கள், குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது போன்றவை இருக்காது.

DMDD அறிகுறிகளுடன் ‘மேனியா’ அறிகுறி களும் சேர்ந்து காணப்பட்டால் அது ‘பைபோலார் கோளாறுகள்’ (Bipolar Disorders) என அறியப்படுகிறது.  பைபோலார் கோளாறுக்கான சிகிச்சை வேறு, … சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறுக்கான சிகிக்சை வேறு. சிகிச்சையை மேம்படுத்த சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதுவிதக் கோளாறுதான் DMDD.

DMDD அறிகுறிகள் எல்லாமும், வேறு மருந்து, உடல்நல, நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை களால் ஏற்பட்டிருந்தால், அது  DMDD  எனச் சொல்ல முடியாது.  மனநல நிபுணர் தகுந்த உடல், மனநல ஆய்வுக்குப் பின்னரே, ஒருவருக்கு DMDD  என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.  இதன் அறிகுறிகள், வேறு பல கோளாறுகளின் அறிகுறிபோலக் காணப்படும் என்பதால், தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணர், மனநல மருத்துவரால்தான் இதைச் சரிவர நிர்ணயம் செய்து சரியான சிகிச்சைக்கு வழிவகுக்க முடியும்.

DMDD உடன் காணப்படும் வேறு பல மனநலக் கோளாறுகள்

DMDD தாக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தீவிர மனச்சோர்வு நோய் (Major Depressive Disorder) ஏ.டி.எச்.டி (ADHD) நடத்தைக் கோளாறு (Conduct disorder),  பதற்றக் கோளாறு (Anxiety Disorders) போதை அடிமைக் கோளாறு (Substance Absue Disorders) போன்ற வேறு பல மனநலக் கோளாறு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

சிகிச்சை முறை:

இதன் காரணி சரிவரக் கண்டறியப் படவில்லை.  மருந்து மற்றும் சைக்கோதெரபி முலம் DMDD-யைக் கட்டுப்படுத்த முடியும். DMDD சிகிச்சை யைக் குறித்து பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  செயல்முறை சார்ந்த நடத்தைப் பகுப்பாய்வு (Applied behavior analysts) அறிவாற்றல் - நடத்தை சிகிச்சை, குடும்ப ஆலோ சனை, அவசரக்கால மேலாண்மை (ContingeNcy management)  ஆகியன இதைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படுகின்றன. 

இவர்களுக்குத் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், அதைச் சமாளிக்கவும் வழி முறை கற்றுத் தரப்படுகிறது. மற்றவர்களின் செயல் பாடுகளின் சரியான நோக்கத்தைப் புரிந்துகொள்ள உளவியல்-சார் கல்வி(Psychoeducation)  தரப்படுகிறது. 

மருந்துகள் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் சரியான வழிமுறைகளைக் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், சிகிச்சையளிக்கப்பட்ட சில வாரங்களில், நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடன் பெற்றோர், பாதிக்கப்பட்டவர் சிகிச்சையை நிறுத்து வது மிகவும் தவறான விசயம்.  பாதியிலேயே நிறுத்தப்படும் மருந்தினால் கோளாறு திரும்பத் தாக்கும் அபாயம் அதிகமாகிறது.  பல தருணங்களில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே, மருந்து களைத் தொடர்ந்தும் சிலர் சாப்பிட்டு வருவதுண்டு. இதனால் பல மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. சில நேரங்களில் இப்படிக் கொடுக்கப்படும் மருந்துகளுக்குப் பாதிக்கப் பட்டவர் அடிமையாகும் சூழலும் ஏற்படுவதுண்டு.

மன அழுத்த அறிகுறிகள்:

அதீத மன அழுத்தம், கடுமையான உடல் மற்றும் மனநல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும். மன அழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணரும் முன்பே இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும். தினம் தினம் பழகிப்போவதால் மன அழுத்தத்தின் அறிகுறிகள் வித்தியாசமாகத் தெரியாது, நாம் அறியாமலேயே நம்முள் படர்ந்துவிடும்.  மன அழுத்தத்தின் அளவு கட்டுப்பாடின்றிப் போகும்போது, அதை முன் கூட்டியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.  பொதுவான அறிகுறிகள் இவை.

அறிவுத்திறன் சார்ந்த அறிகுறிகள்:

ஞாபகமறதி, கவனம் செலுத்த முடியாத நிலை, முடிவெடுக்க முடியாத நிலை, கெட்ட விசயத்தை, எதிர்மறை விசயத்தை மட்டுமே பார்ப்பது, பதற்றமான, வேகமான எண்ணங்கள், எண்ணங் களை ஒருமுகப்படுத்துவதில் சிரமம், பிரச்ச னையை மறக்க முடியாத நிலை, அதிகக் கவலை (அழவேண்டும் போலிருத்தல்), எரிச்சல், கோபம், ஓய்வெடுக்க இயலாமை, அதிக உணர்ச்சி வசப்படுதல், சம்பந்தமில்லாத உணர்வுகளை சம்பந்தமில்லாத இடத்தில் வெளிப்படுத்துதல் (காரணமற்ற கோபம்) தனிமையாக உணர்தல்.

உடல் சார்ந்த அறிகுறிகள் :

வலிகள் (தலைவலி, கழுத்து வலி, மார்பு வலி), வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அதிக இதயத் துடிப்பு, பாலியல் நாட்டமின்மை, அடிக்கடி சளி பிடித்தல்.

செயல்பாடு சார்ந்த அறிகுறிகள்

அதிகமாக - குறைவாகச் சாப்பிடுதல், அதிகமாக - குறைவாகத் தூங்குதல், தனிமையை நாடுதல், வேலையைத் தள்ளிப் போடுதல், பொறுப்பைத் தட்டிக்கழித்தல், ரிலாக்ஸ் ஆவதற்குக் குடி, சிகரெட், போதை மருந்து உபயோகித்தல், நகத்தைக் கடிக்கும் பழக்கம், பற்களைக் கடிக்கும் பழக்கும், உறவுகளோடு தகராறு, வழக்கத்தை விட வேகமாகப் பேசுதல்.

பொதுவாக மன அழுத்தத்துக்காக யாரும் சிகிச்சை பெற முன் வருவதில்லை.  அது முற்றிப் போய் அதனால் ஏற்படும் உடல், மன, குடும்ப உறவுச் சீர்கேடுகளுக்குப் பிறகே மன அழுத்தம் திரையின் பின் உள்ளது வெளிச்சமாகிறது. இந்த அமைதியான கொலைகாரனைக் கண்டறிவோம். பின்னர் அதை வெற்றிகரமாகச் சமாளிப்போம்.

மன அழுத்தத்தைச்சமாளிக்கும் ஆரோக்கிய வழிகள் :

மன அழுத்தத்தைச் சமாளிக்க , குறைக்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவது வழக்கம்.  அப்படி பின்பற்றும் வழிமுறைகளுக்கேற்பவே ஒருவரின் உடல், மன ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.

நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுதல், ஆதரவான உறவுகளை, நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப்படுத்துதல் (Managing emotions), நல்ல சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளுதல்  (Positive thinking) நேரத்தைச் சரியாகக் கையாளுதல்(Time Management) பிரச்சனை வரும் முன்பே அதைக் கணித்துத் தயாராக இருத்தல், சரியாகத் திட்டமிடுதல், தன்னைப்பற்றி உயர்வாகக் கருதுதல், இறுக்கமான விசயத்தையும் நகைச்சுவையுடன் அணுகுதல், ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்,… உடற்பயிற்சி, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுதல், 6 - 8 மணி நேரம் தூங்குதல், பிரச்சனை ஏற்பட்டால் அதைக் கண்டு விலகாமல் எதிர்கொண்டு  அதன் காரணியை ஆராய்ந்து அதை சரிசெய்யும், சமாளிக்கும் வழியை தேடிப்பிடித்தல், தசைகளைத் தளர்வாக வைத்திருத்தல் (Relaxing Muscles)  தசைகளை ரிலாக்ஸ் செய்யும் செயல்பாட்டில் ஈடுபடுதல்.

மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமற்ற வழிகள்

தங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என அறியாமலே அதைச் சமாளிக்க பலர் பின்வரும் வழிமுறைகளை கையாள்வார்கள். இப்பழக்க வழக்கங்கள் ஒருவரிடம் அதிகமாகக் காணப் பட்டால் அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.  எப்போது மன அழுத்தம் ஏற்பட்டாலும், அதைக் குறுக்கு வழியில் சரிசெய்ய (எளிதில் தப்பிக்க, தன்னையே மறக்க) தனக்குப் பழக்கப்பட்ட வழி முறைகளையே மனம் பெரும்பாலும் கையாளும். இதுபோன்ற பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவதும் வழக்கம். 

உதாரணமாக,… பிரச்சனை எப்போது வந்தாலும், தங்களை அறியாமலேயே சிலர் அதைச் சமாளிக்க மது அருந்துதல், தீவிரமாகக் கணிணி பயன்படுத்துதல் (குயஉந டிெடிம, ஊடிஅயீரவநச ழுயஅநள) போன்ற செயல்பாடுகளில் முனைவார்கள்.  இப்படிப் பிரச்சனையை நேரடியாக அணுகாமல் அதைத் தவிர்க்கும் பழக்கத்தினால் மனஅழுத்தத்தை ஏற்படுத்திய உண்மையான பிரச்சனை சரி செய்யப் படாமல் அப்படியே இருக்கும்.  அதைச் சமாளிக்க ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்களால் பல பக்க விளைவுகளும் ஏற்பட்டு வாழ்க்கை மேலும் சிக்கலாகும்.

அதிகரிக்கும் சிகரெட் பழக்கம், குடிப்பழக்கம், போதைப் பழக்கம், டென்சனைக் குறைக்க ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்தை அதிகமாகப் பயன் படுத்துதல், பிரச்சனையிலிருந்து தப்பிக்கத் தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, கணிணி உபயோகித்தல், அதிகமாக காபி, டீ, சாக்லெட் அல்லது குளிர்பானங்கள் பருகுதல், தூக்கத்துக்கு மருந்து வாங்கிச் சாப்பிடுதல், காரணமே இன்றி அதிகச் செலவு செய்தல்.

இப்படியான உளவியல் பின்னணியை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.  இது சிறிதான முன்னுரை மட்டுமே. ஆனால் இது பற்றிய உரையாடல்களை நமது நட்பு - தோழமைத் தளங்களில் விரிவாக முன்னெடுக்க வேண்டும்.  ஒரு ஆரோக்கியமான, சுதந்திரமான, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது என்பது, நாம் மற்றவர் களைத் திருத்துவது மட்டுமல்ல, அறிவுறுத்துவது மட்டுமல்ல, மேற்காணும் சமூகம் அமைய நமது குழந்தைகளிடமிருந்து பணியை நாம் தொடங்க வேண்டும். 

உளவியல் வாயிலான குழந்தை வளர்ப்பில் நாம் பற்றாக்குறையுடனே காணப்படுகிறோம்.  அதைக்களைய வேண்டுமெனில் அதற்கென நேரம் ஒதுக்கி, நீண்ட, நிதானமான, பன்மைப்பட்ட கருத்துக்களுடன் கூடிய உரையாடல்களை மேற் கொள்ள வேண்டும்.  இதுபோன்ற சிக்கல்களில் யார் குற்றவாளி என்பதை விட, பரந்துபட்ட உளவியல் அறிதலே நீண்டகாலத் தீர்வாக அமையும்.

Pin It