அம்பேத்கரின் கொடும்பாவியைக் கொளுத்திய ஆர்.எஸ்.எஸ்

1948 ல் அம்பேத்கர் இந்துச் சட்ட மசோதாவைத்  தயாரித்து அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்தார். அதில் பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை, மறுமண உரிமை, ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு அங்கீகாரம் என பல பெண்விடுதலைக் கூறுகள் இருந்தன.

எனவே இந்த இந்துச்சட்ட மசோதவை நிறைவேற்ற விடாமல் செய்ய, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சங்கராச்சாரியும், சாமியார்களும் மிகத்தீவிரமாகப் போராடினார்கள்.

1949 ல் டிசம்பர் 11 ல் புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. டிசம்பர் 12 ல் ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தோழர் அம்பேத்கர், பிரதமர் நேரு ஆகியோரின் கொடும்பாவி களை எரித்தனர்.

எங்கேயும், எப்போதும் பொதுக்கூட்டங்களே நடத்தாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கரையும், அவர் கொண்டுவந்த இந்து சட்ட மசோதைவையும் எதிர்த்து, 1949 மார்ச்சிலிருந்து 1949 டிசம்பருக்குக்குள் புதுடில்லியில் மட்டும் 79 கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தியது.

இந்து மதவெறியர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி பிரதமர் நேரு இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றவே இல்லை. அதனால் தான் தோழர் அம்பேத்கரும் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கிஎறிந்துவிட்டு வெளியேறினார்.

Source: Ramachandra Guha, The Hindu, 18.07. 2004

அம்பேத்கரை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் சவார்க்கர்

“இந்து மதத்தின் மீது வன்மம் கொண்டு ஒவ்வொரு நாளும் அம்பேத்கர் இந்து மதத்தின் மீது வசைமாறி பொழிகிறார். அவர் புத்தரைப் பகுத்தறிவுவாதி என்கிறார். பெளத்தம் அப்பழுக்கில் லாத சிறந்த மதம் என்கிறார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளைக் கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத் திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக் கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாகத் துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்.”  - 1956, சாவர்க்கர் தொகுப்புகள்

அம்பேத்கரைக் கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்

அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச் சார்ந்த டி.ஏ. காட்டி D.A,Katti ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். 02.02.1980 ல் பெங்களூர் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியதாவது,

“வீர சவர்க்கரின் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம், தமக்கு 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார். அந்தப் பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத்தர கேட்க்கப்பட்ட பணம்! அதாவது அம்பேத்கர் உணவில் விஷம் கலந்து கொடுத்து, சாகடிக்க – அவரது சமையல் காரரிடம் ரூ.500 லஞ்சம் கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடு களைச் செய்திருந்தார். ஆனால், சங்கராச்சாரி இதற்கு பணம் தர மறுத்துவிட்டார். இத்தகவலை பிரபல மராத்திய எழுத்தாளர் நாடக ஆசிரியரான பி.கே. அட்ரே அவர் நடத்திய ‘மராத்தா’ என்ற மராத்திய நாளிதழில் வெளியிட்டார்.

காந்தியார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வீர சவார்க்காரின் தம்பி, பாபா சவார்க்கார் ஆர்.எஸ்.எஸ் சைத் தொடங்கிய ஐவர் குழுவில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் ஆவார்.

தலித் வாய்ஸ் ஏடு, 16.04.1982

இவ்வாறு அம்பேத்கரின் கொடும்பாவியை எரித்து, அவரை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றி, அவரைக் கொலை செய்யவும் முயன்றவர்கள் தான் இன்று அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று மோடிவித்தை காட்டி வருகிறார்கள்.

- காட்டாறு வெளியிட்டுள்ள ‘ஆர்.எஸ்.எஸ் ஸால் ஆபத்து’ நூலில் இருந்து

Pin It