நரேந்திர மோடி அரசு, இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இரண்டு தடவைகள் வரவு-செலவுத் திட்டங்களை அறிவித்தது. 2015 பிப்பிரவரி 28-இல் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்த திட்டம்தான். 2015-16ஆம் நிதி ஆண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களுக்கும், பொதுவான நன்மை தரும் துறைகள் என்பவை எல்லோருக்கும் இலவசக் கல்வி, எல்லோருக்கும் இலவச வைத்தியம், வேலை அற்றோருக்கு வேலை அளிப்பது என்பவை தான். ஆனால் மோடி அரசு இத்துறைகளை அறவே புறக்கணித்துவிட்டது.

எடுத்துக்காட்டாக. குழந்தைகளுக்கான - ஒருங்கிணைந்த மதிய உணவுத் திட்டம், ஊட்டச்சத்து உணவுத் திட்டம் இவற்றுக்கு 2014-15ஆம் ஆண்டில் 18,195 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

இப்போது இது குறைக்கப்பட்டு, 2015-16ஆம் ஆண்டுக்கு 8,335.8 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வ சிக்க்ஷh அபியான் என்கிற ‘எல்லாக் குழந்தைகளுக்கும் ஆன கல்வித் திட்டம்’ என்பதற்கு 27,758 கோடி சென்ற ஆண்டில் ஒதுக்கப்பட்டது. 2015-2016க்கு, அது, 22,000 கோடியாகவும்; மதிய உணவுக்கு ரூ.13,215 கோடி என்பது 9,236 கோடியாகவும்; ‘மத்திய மிக் சிக்ஷா திட்டத்’துக்கு ரூ.5,000 கோடி என்பது 3,565 கோடியாகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில், இந்திய அரசு, கல்விக்கு 2014-15ஆம் ஆண்டுக்கான திட்டத்திலிருந்து, 17 விழுக்காடு தொகையை 2015-16ஆம் ஆண்டில் குறைத்துவிட்டது.

நல்ல பழக்கவழக்கங்களான குறித்த நேரத்தில் கடமைகளைச் செய்தல், உழைப்புக்கு முதலிடம் கொடுத்தல், எல்லோரும் சமமானவர்கள் என்று எண் ணுதல், முடிந்தவரையில் மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்கிற நாட்டுப் பற்றைக் கற்றுக்கொள்ளுதல் என்கிற அடிப்படைப் பண்புகளைக் கல்வி நிலையங்கள்தான் கற்றுத்தர முடியும்.

ஆனால் இந்தியாவில் தரப்படும் கல்வி இந்தப் பண்புகளை வளர்க்க வில்லை.

இந்தியாவில் பள்ளிப் படிப்பைப் பெறும் 70 விழுக்காடு குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்; அவர்களுக்குப் பாடம் கற்பிக்க 12 இலட்சம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அரசுப் பள்ளிகளில் சரிவரப் பாடம் கற்பிக்கப்படாததால், 5ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் 2ஆம் வகுப்புப் பாட நூலைக் கூடச் சரியாகப் படிக்கும் திறமையைப் பெற்றிருக்கவில்லை. மேலும் முதல் வகுப்பில் 100 குழந்தைகள் சேர்ந்தால், அவர்களில் 42 விழுக் காடு குழந்தைகள்தான் 10ஆம் வகுப்புப் படிப்பை எட்டுகிறார்கள். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியல் வகுப்பு-பழங்குடி வகுப்புக் குழந்தைகளில் அதிகம் பேர் பத்தாம் வகுப்பைக்கூட எட்டுவது இல்லை.

அடுத்து, இந்திய அரசின் தேசிய மக்கள் நல - சுகா தாரக் கொள்கைக் குறிப்பில், தேசிய மொத்த வருமா னத்தில் ((GDP). குறைந்தது 2.5 விழுக்காடு மக்கள் நலம் என்கிற சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவெறும் வாய்ச்சவடாலாக மட்டும் இன்றுவரை இருக்கிறது.

அதாவது, 2015-16ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறைத் திட்டத்துக்கு, ரூபா 33,150 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி, அடிப்படை மருத்துவ வசதியைப் புறந்தள்ளி விட்டு, அதே மூச்சில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ் நாடு, இமாசலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில்-அனைத் திந்திய மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனங்களை (All India Institute of Medical Sciences)ப் புதிதாகத் தொடங்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.

இந்தியத் தலைநகரான புதுதில்லியிலுள்ள AIIMS - என்ற தலைமை மருத்துவ நிறுவனத்திலேயே-திறமை யான மருத்துவர்கள் இல்லை; நல்ல நிர்வாகம் இல்லை; சிறப்பான வைத்தியம் தரப்படவில்லை. இது அரசியல் கட்சிகளின்-செல்வாக்குள்ள தரகர்களின் தலையீட்டால் சீர்குலைந்து கிடக்கிறது.

காட்டாக, தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு சிறு வணிகர், தன் இரண்டு வயது ஆண் குழந்தையை புதுதில்லி AIIMS-தலைமை மருத்துவமனையில் சேர்த் தார். அக்குழந்தைக்குப் பிறவியிலேயே விநோதமான நோய் தொற்றியுள்ளது. அக்குழந்தைக்கு இலவசமாக மருத்துவம் செய்ய அவர் கோரினார். அதற்காக, தில்லி உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் பெற்றோர் வழக் குத் தொடுத்தனர்.

AIIMS அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட் டார்கள். “இந்த மருத்துவமனைக்கு அரசினால் ஒதுக் கப்பட்ட நிதியைக் கொண்டு, பொதுவான நோய் களுக்கு உரிய மருந்துகளைத்தான் வாங்க முடியும். விநோதமான நோய்களுக்கான மருந்துகளை வாங்கி வைத்தியம் செய்ய முடியாது” என்று, தில்லி உயர்நீதி மன்றத்தில் அவர்கள் பதில் மனுவைப் (Affidafit) பதிவு செய்தனர். (“Sunday Times of India”,, Delhi 22.3.2015). (இதுதான் மோடி அரசின் இலட்சணம்)

மற்றும் இந்தியாவில் 80 அகவையைத் தாண்டிய வர்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இவர் களை உள்ளிட்டு, 60 அகவை தாண்டிய மூத்தகுடி மக்கள் என்போர் 10.5 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களில் ஏழைகளுக்கு இலவச வைத்தியம் தர ஒரு திட்டமும் இல்லை. இப்போது முதியோர் நலம் பற்றி அக்கறை கொள்ளுவோம் என்று அரசு அறிவித் துள்ளது.

அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளு வதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது பெரிய குறை.

அறிவியல் ஆய்வுப் பணிகளுக்காக, இந்திய அரசு, தேசிய மொத்த வருமானத்தில் (GDP) வெறும் 0.8 விழுக்காட்டு அளவே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா தேசிய மொத்த வருமானத்தில் 2.8 விழுக் காடு ஒதுக்குகிறது; சீனா 1.8 விழுக்காடு ஒதுக்குகிறது.

அதனால் தான் மருத்துவம் மற்றும் அறிவி யல், பாதுகாப்புத் துறைக் கருவிகள் பற்றிய ஆய்வுகள் அங்கெல்லாம் வளர்ந்துள்ளன. நிற்க.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மத்திய அரசு - வருமான வரி, கலால் வரி முதலான கொழுத்த வரி வசூல்கள் மூலம் வருமானம் பெறுகிறது.

அந்த வரிகள் மூலம் வரும் வருமானத்தில் 42 விழுக்காடு பங்கை அந்தந்த மாநிலத்துக்குத் திருப்பித் தர வேண்டும் என்று, 14வது நிதிக்குழு பரிந்துரை செய்தது. மோடி அரசு இதை மட்டும் ஏற்றுக்கொண் டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் மாநிலங்களுக்கு ஏற் கெனவே 2014-15 வரை, மத்திய அரசால் 31 திட்டங் களுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவியில், இப்போது 8 திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க முடியாது என்று, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்து விட்டது.

இத்துடன் நில்லாமல், கலால் வரி (Excise Tax) போன்ற மறைமுக வரிகளைப் பெரிய அளவில் விதித்து ஏழைகளை வதைக்கவும் அரசு திட்டம் தீட்டிக் கொண்டது.

மொத்த வரவு செலவில், ரூபா.77,526 கோடி ஊரக வளர்ச்சிகளுக்கு உரிய நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

இதில் ஆளும் கட்சிகளின் தலையீடும், அதிகார வர்க்க ஊழலும் இல்லாவிட்டால் ஊரகச் சாலை வசதி கள், குடிநீர் வசதிகள் பெருக்கப்பட வழி ஏற்படும்.

வேளாண் உற்பத்திப் பொருட்களான கோதுமை, பார்லி, பருத்தி, உருளைக்கிழங்கு இப்படிப்பட்ட பொருள்களுக்கு ஏற்கெனவே பரிவர்த்தனை வரியிலிருந்து இந்திய அரசு விலக்கு அளித்திருந்தது.

இப்போது, வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதா கவே, அரசு ஆணை மூலம் - நெல் அல்லது அரிசி, வெங்காயம், வேர்க்கடலை, இஞ்சி, சூரியகாந்தி விதை, பாக்கு முதலான 38 வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குப் பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்கு அளிக் கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பண்டங்களை வாங்கி உண்ணும் நிலையில் உள்ள உழைப்பாளி மக்கள் இந்தியாவில் அதிகம்.

இந்த நிலையில், மோடி அரசு பதவி ஏற்ற உடனேயே அமர்த்திய எட்டு பேர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு (HLC) வினர் :

1. உணவு சேமிப்புக் குழுமம் (FCI) வேண்டிய தில்லை;

2. வேளாண் உற்பத்திப் பொருள்களான நெல், கோதுமை இவற்றை அரசு கொள்முதல் செய்வது வேண்டியதில்லை;

3. பங்கீட்டுக் கடைகள் வைத்து அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், உண்ணும் எண்ணெய் முதலான பண்டங்களை, அவற்றின் மூலம், குறைந்த விலைக்கு ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்குவதற்குப் பதிலாகப் பணமாக வழங்கிவிடலாம் எனச் செய்துள்ள பரிந்துரைகள் மிகவும் கேடானவை.

100க்கு 67 பேர் பண்டங்களை வாங்கி உண்ணும் நிலையில் இருப்பதை உணராமல், இம்முடிவுகளை அரசு ஏற்றால், உழைப்பாளி மக்கள் எல்லோராலும் வெளிச்சந்தையில் அவற்றை உயர்ந்த விலை தந்து வாங்க முடியாது; இராப் பட்டினி கிடப்போரின் எண் ணிக்கை அதிகமாகும்.

மொத்த வேளாண் பண்ட உற்பத்தி செய்வோரில் 6 விழுக்காட்டுப் பேர் மட்டுமே அரசுக் கொள்முதல் நிலை யங்களில் கட்டுப்படியாகாத விலைக்குத் தானியங் களை விற்கிறார்கள். மற்றவர்களில்-சிறு, குறு வேளாண் குடிகள், கடன் தொல்லை தாங்காமல், தனியாரிடம் ஈன விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

எந்த உண்ணும் பண்டத்தையும் தனியார் பெரு வணிகர்கள் மொத்தமாகக் கொள்முதல் செய்வதைத் தடைசெய்வது முதலாவது தேவை.

முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரி மை அளிக்கும் நரேந்திர மோடி அவர்களின் அரசு, வெகுமக்கள் நலனுக்கு எதிரானதே என்பதை, நடு நிலையில் நின்று, எல்லோரும் உணர வேண்டு கிறோம்.

1.4.2015           

வே. ஆனைமுத்து

Pin It

ஒரு நூலைப் படிக்காமலேயே, ஒரு திரைப்படத் தைப் பார்க்காமலேயே அவற்றை அரசு தடை செய் யும் அராஜகப் போக்கு உலகில் மிகப்பெரிய சனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அண் மைக்காலத்தில் அதிகமாகி வருகிறது. இதற்கு மதப் பழமை வாதப் பிற்போக்காளர் சிலரின் வெற்றுக் கூச் சலை அரசு நொண்டிச் சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இத்தன்மையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வரும், இருபது ஆண்டுகளாகத் திரைப்படத் தயாரிப் பாளராக இருந்து வருபவருமான லெ°லீ உத்வின் எனும் பெண், இலண்டன் பி.பி.சி.4 சேனல் பிரிவு படக்குழுவினரின் துணையுடன் தயாரித்த “இந்தியா வின் மகள்” என்ற ஆவணப் படத்தை நடுவண் அரசு, நீதிமன்றத்தின் மூலமாக, இந்தியாவில் வெளியிடு வதற்குத் தடை விதித்தது. இந்த ஆவணப் படத்துக்கு “மதநம்பிக்கையை - உணர்வைப் புண்படுத்துகிறது” என்று மதவெறியர் வழக்கமாக எழுப்பும் கூச்சல் கார ணமாகத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த ஆவணப் படத்தை ஆவேசமாக எதிர்த்ததால் தடைவிதிக்கப் பட்டது.

லெ°லீ உத்வின் ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் உருவக்கியுள்ள ஆவணப்படம், 2012 திசம்பர் 16 அன்று இரவு, தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவியான 23 அகவை இளம் பெண், ஆறு பேர் கொண்ட காமவெறிக் கும்பலால் மிகக் கொடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, குடல்சரிந்து கிடக்க, ஒட்டுத் துணியும் உடலில் இல்லாத நிலையில் பேருந்திலிருந்த வீசி எறியப்பட்ட நிகழ்ச்சியை மய்யமாகக் கொண்டதாகும்.

தில்லியில் நடந்த இக்கொடிய பாலியல் வன் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், பேரணி களும், கருத்தரங்குகளும் இந்தியா முழுவதும் ‘அறச் சீற்றம்’ கொப்பளிக்க நடத்தப்பட்டன. கல்லூரி மாணவி யரும் பெண்களும் பெருமளவில் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் தில்லியில் துணை மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தன. பெண்களின் பாது காப்பை உறுதி செய்திட இந்திய நாடே எழுச்சி பெற்று விட்டது போல ஊடகங்கள் சித்தரித்தன. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.

இந்த எதிர்ப்பைத் தணிக்க, கொடிய பாலியல் வல்லுறவின் விளைவால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு மருத்துவம் செய்யும் பொறுப்பை நடுவண் அரசு ஏற்றுக்கொண்டது, ஆயி னும் அப்பெண் இறந்துவிட்டார். ஓடும் பேருந்தில் தன் னைக் கற்பழிக்க முயன்றவர்களை இறுதி வரையில் தீரத்துடன் எதிர்த்துப் போராடியதால் அப்பெண்ணுக்கு, ‘பயம் அற்றவள்’ என்று பொருள்படும் ‘நிர் பயா’ என்ற பெயரை ஊடகங்கள் சூட்டின. அவரின் உண்மை யான பெயர் வெளிவராமல் காத்தன.

நடுவண் அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எ°. வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்ததாகும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுப்பதற்கு, இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் மேலும் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு வர்மா குழுவை நடுவண் அரசு கேட்டுக் கொண்டது. மூன்று மாதங் களுக்கு முன்பே வர்மா குழு அறிக்கையை அரசிடம் அளித்தது. அக்குழுவின் சில பரிந்துரைகளை அரசு சட்டமாக்கியது. அதன்பிறகும், பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இங்கே நாம் ஒரு வினாவை எழுப்ப வேண்டிய வர்களாக இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தில்லியில் நிர் பயாவுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்தியாவே பெண் ணுரிமைக்காகப் போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. ஆனால் இப்போது, 126 கோடி மக் களின் பேராளர்களைக் கொண்டிருக்கும் நாடாளு மன்றமும், நடுவண் அரசும் நிர் பயாவுக்கு நேரிட்ட கொடுமையை படம் பிடித்துக் காட்டும் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்துக்குத் தடை விதித்திருப்பது ஏன்?

ஏனெனில், இந்த ஆவணப் படம், பெண்கள் குறித்து நம் சமூகம் எந்த அளவுக்கு இழிவான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறது என்பதை முகக்கண் ணாடியில் நம் கொடூரமான முகத்தைப் பார்ப்பது போல் காட்டுகிறது. பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்கிற குறுகிய எல்லைக் கோட்டைத் தாண்டி, பெண்களின் உரிமை மறுப் புக்கும், அடிமைத்தனத்துக்கும் அடிப்படையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைத் தகர்த்திடும் நிலை உருவாகிவிடுமோ என்று, ஆளும் வர்க்கமாக வுள்ள ஆணாதிக்கம் அஞ்சுகிறது. அதன் ஒரு பகுதி யாகத்தான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிப்பது போலவே நடித்துக் கொண்டே, அதையும் அளிக்க மறுத்து வருகிறது.

பெண்களின் உடல், உணர்வு, சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் தமக்குக் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆணாதிக்கச் சமூகம் கருதுகிறது. ஆண் அனுமதிக்கின்ற வரை யறைக்குள் - எல்லைக்குள் மட்டுமே பெண்கள் ‘சுதந்தரத்தை’ அனுபவிக்கலாம். ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகத் தனக்கு ஒரு நல்ல அடிமையாக இருந்துவரும் பெண்ணுக்கு முழுச்சுதந் தரமும், விடுதலையும் அளித்திட ஆண்கள் முன் வரவில்லை.

இதுகுறித்து 12-8-1928 நாளிட்ட “குடிஅரசு” ஏட்டில் எழுதிய தலையங்கத்தில் பெரியார் “பெண் களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்று வதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டா குமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக் காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெரு குமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங் கும். அப்படி ஒருகால் ஏதாவது ஒருசமயம் மேற் படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டா லும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்” என்று எழுதினார்.

‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தை எதிர்ப் பதில் நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் தாம் முன்னணியில் நின்றனர். இந்திய மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சியின் பெண் உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர், ‘இந்த ஆவணப்படம் இந்திய சமுதாயத்தையே அவ மதிக்கும் செயல். பெண்களை இழிவுபடுத்தும் இப்படத் தைத் தடை செய்ய வேண்டும்’ என்று முழங்கினார். மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சியின் பெண் உறுப்பினர் ஜெயாபச்சன் (இந்தி நடிகர் அமிதாப்பச் சனின் மனைவி) “சிறைக்குள் இருக்கும் கற்பழிப்புக் குற்றவாளி பேட்டி அளிக்கவும், பெண்களுக்கு எதிரான அவதூறான கருத்துகளைத் தெரிவிக்கவும் எப்படி அனுமதி தரலாம்” என்று கேள்வி எழுப்பி, இந்த ஆவணப் படத்தின் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினார்.

பெண் விடுதலை குறித்துப் பெண்களிடம் உள்ள புரிதல் இன்மையைப் பற்றிப் பெரியார் மேற்குறிப் பிட்டுள்ள அதே குடிஅரசு தலையங்கத்தில், “பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே (பிள்ளைப் பேற்றுக்கான உடற்கூறுகள் - கட்டுரையாளர்) தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண் டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள்.

பொது மக்கள், பிறவியில் உயர்வு-தாழ்வு ஒழிய வேண்டு மானால், எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப்பொசுக்க வேண்டியது அவசியமோ - அதுபோலவே, பெண் மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மைச் சுதந்தரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண் அடிமையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்ட வை என்பதற்குப் பொறுப்புள்ள கடவுள் தன்மை யும் ஒழிந்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்து, நடுவண் அரசு, லெ°லீ உத்வினின் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைத் தடை செய்ததற்கு முதன்மையான மூன்று காரணங்களைக் கூறியுள்ளது. நிர் பயாவை வல்லுறவு செய்த ஆறு பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதி அய்ந்து பேரில், நால்வருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஒருவன் ‘சிறுவன்’ (18 அகவை ஆகவில்லை) என்ற காரணத் தால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு வரான முகேஷ் சிங் (பேருந்து ஓட்டுநர்) என்பவரின் நேர்காணல் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற் றுள்ளது. “இந்த நேர்காணலில் முகேஷ் சிங் பெண் களைப் பற்றிக் கூறியுள்ள கருத்துகள், பெண்களுக்கு எதிரான ஆதிக்க மனப்போக்கை நியாயப்படுத்தி ஆண்களை மேலும் வன்முறையில் ஈடுபடுச் செய்யத் தூண்டுவனவாக உள்ளன. இக்கருத்துகள் பெண்களை அச்சுறுத்துவனவாக இருக்கின்றன. அதனால் பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தக் கூடும். அது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும்” என்பது இந்த ஆவணப்படம் தடைசெய்யப்படுவதற்கான முதலாவது காரணமாக நடுவண் அரசால் கூறப்பட்டுள்ளது.

2012 திசம்பரில் நிர் பயாவுக்கு நேரிட்ட பாலியல் கொடுமையைக் கண்டித்து, தில்லியில் பல்கலைக்கழக மாணவிகளும் பெண்களும் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, காவல்துறையினர், அவர்கள் மீது தண்ணீர்ப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். சமூகத்தில் எந்தவொரு மெலிந்த பிரிவனரும், எவ் வளவு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் உள் ளாக நேரிட்டாலும், அதை எதிர்த்துப் போராட முனை வது, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் சனநாயக விரோதச் செயல் என்று அரசு கருதுகிறது. இந்தியா வில் சனநாயகத்தின் ‘மாண்பு’ இதுதான்!

சரி, முகேஷ் சிங் அந்த நேர்காணலில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் : “இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்கள் தான் பாலியல் மனநிலையில் இருக்கும் ஆண்களின் கவனத்தைக் கவருகிறார்கள். எந்தப் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டால், அதை எதிர்த்துப் போராடக் கூடாது. அமைதியாக இருந்து, அனுமதித்துவிட வேண்டும். அப்படி இருந்தால் கற்பழிக்கப்பட்ட பிறகு, அவள் விட்டுவிடப்படுவாள். எந்த நல்ல பெண்ணும் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றமாட்டாள். கற்பழித்த வனைவிட, அந்தப் பெண்தான் கற்பழிப்புக்குப் பொறுப்பு. ஆணும் பெண்ணும் சமம் அல்ல.

பெண் என்பவள் வீட்டைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலை செய்ய வேண்டுமே தவிர, இரவு நேரங்களில் டிஸ்கோ, பார் என்றெல்லாம் சென்று கொண்டு, தவறான காரியங் களைச் செய்து கொண்டும், தவறான உடைகளை அணிந்து கொண்டும் இருக்கக் கூடாது. இப்போது எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை இனி கற்பழித்து விட்டுக் கொலை செய்வதை அதிகரித்துவிடும். இப்போது கற்பழிப்பவர்கள், கற்பழிப்பு முடிந்தவுடன், பொதுவாக அவளை விட்டுவிடுவோம். வெளியில் சொல்ல மாட்டாள் என்று கூறி விட்டுவிடுவார்கள். இனி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று கொன்று விடுவார்கள். நிர்பயா சம்பவம் ஒரு விபத்துத் தான்” (தினத்தந்தி 4-3-2015). முகேஷ்சிங், தான் செய்த கொடுஞ்செயலுக்காக எவ்விதக் குற்றவுணர்ச் சியும் இல்லாமல், மிக இயல்பாக அதை நியாயப் படுத்தி விரிவாகப் பேசினார்.

“நள்ளிரவில் வீதியில் ஒரு பெண் தன்னந்தனி யாக அச்சமின்றி நடக்கும் நிலை ஏற்படும்போதுதான், உண்மையான சுதந்தரம் இந்தியாவுக்குக் கிடைத்தது என்று பொருள்” என்று கூறிய காந்தியாரின் தேசத் தில், முகேஷ் சிங்கின் கூற்று, ஏதோ விதிவிலக்காக - பிறழ்மனம் கொண்ட ஒருவனின் பிதற்றல் என்று ஒதுக்கிவிட முடியாது. பெண்களைப் பற்றி முகேஷ் சிங் கூறிய கருத்தை முழுவதுமாகவோ, பாதியோ, கால் பகுதியோ சரி என்று ஏற்கும் மனநிலை கொண்டவர் களாகவே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். முகேஷ் சிங்கிற்காக வழக்காடும் வழக்குரைஞர்களில் ஒருவரான ஏ.பி. சிங், “என் சகோதரியோ, மகளோ நிர்பயாவைப் போல நடந்து கொண்டிருந்தால், அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று இருப்பேன்” என்று அந்த ஆவணப் படத்திற்கான பேட்டியில் எவ்விதத் தயக்கமுமின்றி கூறியிருக்கிறார்.

பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மனப்போக்கு திடீரென்று உண்டானதன்று. இந்த ஆணாதிக்கச் சிந்தனை ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இருந்து வருகிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மனித சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், “பெண்கள் ஆண்களின் ஆசைக்கும், அனுபவிப்புக்கும், கட்டுப் பாட்டுக்கும், காவலுக்கும் உட்பட்டவர்கள்; சுதந்தரத் தை, உரிமையை, உடைமையைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள்” என்கிற அடிப்படையான பெண்ணடி மைத்தனத்தின் கூறுகள், கிட்டத்தட்ட அப்படியே இன்றும் நீடிக்கின்றன. “ஒரு பெண் சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்” என்று 1800 ஆண்டுகளுக்குமுன், முதன் மையான இந்துமத சாத்திர நூலாகக் கருதப்படும் மனு°மிருதியில் எழுதப்பட்டது-இன்றும் ஆண்களின் சிந்தனையில் மட்டுமின்றி, நடப்பிலும் ‘இந்துக் கலாச் சாரம்’ என்ற பெயரால் இது நீடிக்கிறதல்லவா!

இந்து மதத்தில் மட்டுமின்றி, கிறித்துவம், இசுலாம் முதலான எல்லா மதங்களிலும் பெண் களை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்து கின்ற கருத்துகள் நிறைந்து கிடக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற்று வளர்ந்த நாடுகளாக உள்ள மேலை நாடுகளில் கிறித்துவ மதம் உள்ள போதிலும், வரலாற்று வழிப்பட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலத்தில் அந்நாடு களில் பெண்ணடிமைத்தனம் குறைந்துள்ளது. ஆனால் இசுலாமிய நாடுகளில் இந்து மதத்தை விடக் கொடுமையானதாகப் பெண்ணடிமைத் தனம் இருக்கிறது.

எனவே முகேஷ் சிங்கின் பெண்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட இந்த ஆவணப் படத்தை வெளி யிட அனுமதித்தால், உடனே கட்டுப்படுத்த முடியாத அளவில் ஆண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவார்கள் என் றும், அதன் விளைவாகப் பெண்கள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு எதிர்த்து, நாட்டையே கலவர பூமியாக்கிவிடுவார்கள் என்றும் நடுவண் அரசு பூச்சாண்டி காட்டுவது, இச்சிக்கலைத் திசைத்திருப்பும் ஆணாதிக்க அரசியல் சூழ்ச்சியேயாகும்.

ஆவணப்படத்தைத் தடைசெய்ததற்கு நடுவண் அரசு கூறும் இரண்டாவது காரணம் நகைப்புக்குரிய தாகும். முகேஷ் சிங் உள்ளிட்ட நால்வரின் தூக்குத் தண்டனையின் மேல்முறையீட்டின் மீதான விசா ரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், குற்றவாளியின் கருத்தை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகிவிடுமாம்! தீர்ப்பின் போக்கை மாற்றி விடும் அபாயம் இருக்கிறதாம்! நீதிபதிகள் முகேஷ் கூறு கின்ற ‘நியாயத்தை’ ஏற்று நிரபராதி என்று முகேஷை விடுதலை செய்துவிடும் அளவுக்கு முட்டாள்கள் என்று நடுவண் அரசு நினைக்கிறதா?

நடுவண் அரசு கூறும் மூன்றாவது காரணம், திகார் சிறை நிருவாகம் விதித்த நிபந்தனைகளை ஆவணப் படத்தைத் தயாரித்த லெ°லீ உத்வின் மீறி விட்டார் என்பதாகும். இதுவும் அப்பட்டமான வடிகட்டிய ஒரு பொய்யே ஆகும்.

2012 சூலை 12 அன்று தில்லி திகார் சிறைத் துறை உயர் அதிகாரிக்கு (னுசைநஉவடிச-ழுநநேசயட) ஆவணப் படம் தொடர்பாக முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க அனுமதி கோரி, லெஸ்லீ உத்வின் மடல் எழுதினார். அம்மடலில், “இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும், உலகம் முழுவதும் இது தொடர்பாக ஆண்களிடம் உள்ள மனப்போக்குக் குறித் தும் விரிவாக ஆராய்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதே எங்கள் நோக்கம்” என்று லெ°லீ உத்வின் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஆவணப்படம் குறித்துச் சிக்கல் ஏற்பட்ட பின் செய்தியாளர்களிடம் லெஸ்லீ உத்வின் உரை யாடிய போது, “நானும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேரிட்டவள்தான். உலகில் 5 பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் வல்லுற வுக்கு ஆளாக்கப்படுகிறார். நிர் பயாவுக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமையைவிட, அதையொட்டி இந்தியா முழுவதும் ஏற்பட்ட பேரெழுச்சிதான் இந்த ஆவணப் படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்று சொன்னார்.

சிறைத் துறை விதித்த நிபந்தனையின்படி, முகேஷ்சிங்கிடம் எடுத்த பேட்டி முழுவதையும், 2012 திசம்பர் 9, 10 ஆகிய நாள்களில் திகார் சிறை நிருவாகம் அமைத்த அய்ந்து பேர் கொண்ட குழுவிடம் திரையிட்டுக் காட்டினார். எடுக்கப்பட்ட முழுப்படத்தையும் பார்க்க 16 மணிநேரமாயிற்று. நிர் பயாவின் பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்களிடம் பேட்டி கண்டார்.

நிர் பயாவின் உண்மையான பெயரை (ஜோதி சிங்) வெளிநாடுகளில் திரையிடப்படும் படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர்களிடம் இசைவு பெற் றார். திரையிடுவதற்கு ஏற்ற அளவில் தொகுக் கப்பட்டுச் சுருக்கப்பட்ட அறுபது நிமிட ஆவணப் படத்தை உச்சநீதிமன்றத்தின் அய்ந்து வழக்குரை ஞர்களிடம் காட்டினார். இதற்காக அவர்களுக்கு ஊதியம் கொடுத்தார். பிறகு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரிடம் இந்த ஆவணப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார். இவர்கள் அனைவரும் இந்த ஆவணப்படம் சட்டவிதி எதையும் மீறுவதாக இல்லை என்று கருத்துரைத்தனர். ஆனால் நடுவண் அரசு சட்ட விதியை மீறினார் என்று பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளது.

உலகப் பெண்கள் நாளான மார்ச்சு 8 அன்று, ஒரு மணிநேரம் காட்டப்படும். இந்த ஆவணப் படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக என்.டி.டி.வி. (சூனுகூஏ) யிடம் காசு எதுவும் பெறாமல் ஒரு நகலைக்கொடுத் தார். “இந்த ஆவணப் படத்தைத் தயாரிக்க எனக்கு 1,20,000 டாலர் செலவான போதிலும் இந்தியாவில் இந்த ஆவணப் படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு காசு கூட வருவாயாகப் பெறக்கூடாது என்று என் மனச்சான்று கூறியது” என்று லெ°லீ உத்வின் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச்சு 3 அன்று திகார் சிறையில் இருக்கும் முகேஷ் சிங் இந்த ஆவணப் படத்தில் கூறியுள்ள கருத்துகள், ஊடகங்களில் வெளியாயின. “இந்தியாவை இழிவுபடுத்துவதற்கான திட்டமிட்ட சதியே இந்த ஆவணப்படம்” என்று பழைமைவாதிகள் எதிர்த்த னர். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் இது எதி ரொலித்தது. மோடி அரசு இந்தியாவில் இந்த ஆவணப் படத்தை வெளியிடுவதற்குத் தடைவிதித்தது. ஆனால் இப்படம் மார்ச்சு 5 அன்று பி.பி.சி.4 தொலைக் காட்சியிலும், 9-3-15 அன்று நியூயார்க் நகரில் இதற் காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும் வெளியிடப்பட்டது. பி.பி.சி.4 தொலைக்காட்சி வெளி யிட்டதை இந்தியாவில் ‘யு டியூப்’இல் பலரும் பார்த்தனர்.

14-3-15 அன்று இந்தியாவின் நிதி அமைச்சர் இலண்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஜெ.எ°.வர்மா குழுவின் பரிந்துரைக்குப்பின் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதி 228-ஏ பிரிவை இந்த ஆவணப்படம் மீறியுள்ளது. அப்பிரி வின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, படத்தையோ வெளியிடக் கூடாது. ஆனால் இந்த ஆவணப் படத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது” என்று கூறினார் - மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தது போல!

பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் பார்வை, வெறும் உணர்வு, மனம் சார்ந்ததாக மட்டும் இல்லை. அது, வரலாற்று வழிப்பட்ட இரண்டு காரணிகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. அவை 1. தனிச் சொத்து டைமை, 2. மதம் சார்ந்த கலாச்சாரம்.

மார்க்சிய மூலவர்களில் ஒருவரான பிரெடரிக் எங்கெல்சு குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற் றின் தோற்றம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில், மனித சமுதாய வரலாற்றில், ஆணுக்கு மட்டுமே உரியதான தன்மையில் தனிச்சொத்துடை மை ஏற்பட்டபோதுதான் குடும்பம், பெண்ணுக்கு மட்டும் உரித்தான ஒருதார மணம், விபச்சாரம் ஆகியவை தோன்றின; தன் விந்துக்குப் பிறந்த பிள்ளை மட்டுமே தன் சொத்துக்கு உரிய வாரிசாக இருக்க வேண்டும் என்பதால் பெண் மீது பலவகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாள் என்பதை, விரி வாக எங்கெல்சு விளக்கி உள்ளார். பெண் இந்த அடிமைச் சிறையிலிருந்து தப்பித்து வெளிவர முடியாத வகையில் மதக் கருத்துகளும், கலாச்சாரக் கூறுகளும், சமுதாயச் சடங்குகளும் பின்னப்பட்டன.

மனிதருள் பிறவி காரணமாக உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பை - அதன் உச்சக்கட்டக் கொடுமையான தீண்டாமையை ஒழிக்க வேண்டுமா னால் இவற்றைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் இந்துமத சாத்திரங்களை, இதிகாச - புராணங்களைத் தகர்த்து அழிக்க வேண்டும் என்று பெரியாரும், மேதை அம்பேத்கரும் தம் வாழ்நாள் முழுவதும் வலியுறுத் தினர்.

அதேபோல, பெண்களின் அடிமை நிலைக்கும், ஒடுக்குமுறைக்கும், உரிமைகள் பறிப்புக்கும், காரணமாக உள்ள பொருளியல் காரணிகளையும் மதம் - கலாச்சாரம் சார்ந்த தடைகளையும் தகர்த்தெறிய வேண்டும்.

சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, பதவிகள் உள்ளிட்ட சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்கிற நிலையை நோக்கிச் செல்லச் செல்ல, பெண் கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மறையும்; பெண்ணுரிமை தழைக்கும்; ஆண்-பெண் என்கிற பேத உணர்ச்சி மாயும். இந்நிலையை எய்திட நீண்ட காலமாகும். ஆயினும் இதை விரைவுபடுத்த வேண்டி யது இன்றைய தலைமுறையின் நீங்காக் கடமையாகும்.

Pin It

விகிதாச்சார வகுப்புவாரி இடப்பங்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில், 17-2-15 முதல் 28-2-15 முடிய வே. ஆனைமுத்து புதுதில்லியில் தங்கிப் பணியாற்றினார். புதுதில்லித் தோழர்கள் ப. இராமமூர்த்தி, புதேரி தானப்பன், இரா. முகுந்தன், ஜெ.பி. ரவி, சி. முத்துகிருஷ்ணன், ஆனந்த செல்வம், எடிசன், எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர்.

சண்டிகாரில் இந்தியக் கூட்டாட்சி பற்றிய பணி :

“உண்மையான இந்தியக் கூட்டாட்சி அமைப்புக் கான குழு”வின் தலைவர் உயர்நீதிபதி அஜித் சிங் பெயின்° அவர்களுடன் கலந்துரையாட வேண்டி, வே. ஆனைமுத்து 1-3-15 பிற்பகல் 1 மணிக்கு சண்டிகார் சென்றடைந்தார்.

1-3-15, 2-3-15 இருநாள்களும் கூட்டாட்சி பற்றி இருவரும் கலந்து பேசினர்.

3-3-15 பிற்பகல் 1 மணிக்கு, நீதிபதியின் வீட்டில் செய்தியாளர்கள் கூட்டத்தில், அஜித் சிங் பெயின்°, வே. ஆனைமுத்து இருவரும் கூட்டாட்சி பற்றிப் பேசி செய்திக்குறிப்பை அளித்தனர்.

4-3-15 : “இந்தியாவை ஓர் உண்மையான கூட் டாட்சியாக ஏன் அமைக்க வேண்டும்” என்பதை விளக்கி, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு விடுத்திட ஏற்ற கோரிக்கை விண்ணப்பத்தை (Memorandum) உருவாக்கி, 4-3-2015 அன்று, பிரதமருக் குப் பதிவு அஞ்சலில் விடுத்து வைத்தனர்.

ஏற்கெனவே, 2013 ஏப்பிரல் 16ஆம் நாள் இப்படிப் பட்ட விண்ணப்பத்தை, அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் பரப்புரை :

அனைத்திந்தியப் பேரவையின் துணைத் தலை வர் டாக்டர் தாவுஜி குப்தா, மறைந்த பெரியவர் சிவ் தயாள் சிங், சௌராசியாவின் தங்கையின் பெயரன் நாராயண் °வரூப், சௌராசியா ஆகியோரின் அழைப் புக்கு இணங்க, 11-3-2015 இரவு 10 மணிக்கு வே. ஆனைமுத்து இலக்னோ சென்றடைந்தார். மேலே கண்ட தோழர்கள் இலக்னோ தொடர்வண்டி நிலை யத்தில் வரவேற்றனர்; இலக்னோ டாலிபாக் பகுதியி லுள்ள சிறப்பு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர்.

12-3-15 இரவு 7 மணிமுதல் 8.30 மணிவரை, உத்தரப்பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் அம்பிகா சவுத்ரி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, வே. ஆனைமுத்து, டாக்டர் தாவூஜி குப்தா, நாராயண் °வரூப் சவுத்ரி மூவரும் உத்தரப் பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் நலத்திட்டங்களைக் குறித்து விரிவாக விவாதித்தனர்.

தமிழ்நாட்டு அரசினர் 2014-15ஆம் ஆண்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் துறை வழியாகவும், ஆதித்திரா விடர் நலத்துறை வழியாகவும் செய்திட்ட திட்டங்கள் பற்றிய அச்சிட்ட அரசு அறிக்கைகளை அமைச்சரிடம் அளித்து, மேலும் மேலும் உ.பி. ஒடுக்கப்பட்ட வகுப்பி னருக்கு நலத்திட்டங்களை வகுத்திட ஆவன செய்யும் படிக் கோரினர்.

அமைச்சருடைய இல்லத்திலிருந்து, தோழர்கள் மூவரும் நேரே இலக்னோ காந்தி பவனில் நடை பெற்ற ஹோலி பண்டிகை - அறுவடைத் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வே. ஆனைமுத்து அவ்விழாவில் சிறப்பு விருந்தி னராகச் சிறப்புச் செய்யப்பட்டார். பலரும் மாலைகள், ஆடைகள் அணிவித்தனர். அவ்விழாவில் உரையாற் றிய விழாக்குழுவினர் நினைவுப் பரிசு வழங்கினர். விழாவிலிருந்து இரவு 11.30-க்கு விடைபெற்றனர்.

13-3-2015 : சிவ் தயாள் சிங் சௌராசியா 113ஆம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு :

தந்தை பெரியார் அவர்களை உ.பி. மாநிலத்துக்கு அழைத்து, 1944 திசம்பர் 29, 30,31ஆம் நாள்களில் கான்பூரில் “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் லீக் மாநாட்டை” நடத்தியவர் இலக்னோவைச் சார்ந்த சிவ் தயாள் சிங் சௌராசியா. அவர் வெற்றிலை பயிரி டும் வேளாண் குடியைச் சார்ந்தவர். அம்மாநாட்டில், அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீக் தலைவ ராகப் பெரியார் ஈ.வெ.ரா.வையும், பொதுச் செயலாள ராக சௌராசியாவையும் தேர்ந்தெடுத்தனர்.

அதே சிவ் தயாள் சிங் சௌராசியா 1953இல் காகா கலேல்கர் தலைமையில் அமர்த்தப்பட்ட முதலா வது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் உறுப்பினராக அமர்த்தப்பட்டு செயல்பட்டார். 1955-இல், கலேல்கர், பிரதமர் நேருவிடம் பரிந்துரை அறிக்கையை அளித்த போது, இவரும் உடன் சென்றார்.

வடஇந்தியாவில், உ.பி.-முசாபர் நகரில், 7-5-1978 அன்று நடைபெற்ற “உத்தரப்பிரதேசப் பிற்படுத் தப்பட்டோர் மாநாட்டில்”, சௌராசியா தலைமையில் தான், முதலாவதாக, வே. ஆனைமுத்து, இடஒதுக்கீடு பற்றித் தொடக்கவுரை ஆற்றினர். இராம் அவதேஷ் சிங், எம்.பி., சீர்காழி மா. முத்துச்சாமி, வே.ஆனைமுத்து மூவரும் வடநாட்டில் பங்கேற்ற முதலாவது பொது நிகழ்ச்சி அதுதான் என்பது நினைவு கொள்ளத்தக்கது. சிவ் தயாள் சிங் சௌராசியா 1903 மார்ச்சு 13இல் பிறந்தவர். அன்னாரின் 113வது பிறந்த நாளை ஒட்டி, 13-3-2015 மாலை 7 மணிக்கு, இலக்னோவில், அம் பேத்கர் பவனில் நடைபெற்ற எளிய விழாவில், வே. ஆனைமுத்து, தாவூஜி குப்தா, காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி தாராபுரி மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினர்.

14-3-15 அன்று எந்த நிகழ்ச்சியும் இல்லை.

15-3-2015 : பஸ்தியில் பெருந்திரளான கூட்டத்தில் வே. ஆனைமுத்து, தாவுஜி குப்தா பங்கேற்பு :

உ.பி.யில் இலக்னோவிலிருந்து வடகிழக்கில் 203 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது பஸ்தி என்னும் பஸ்தி மாவட்டத் தலைநகரம்.

ஹோலி பண்டிகையை (அறுவடைத் திருவிழாவை) முன்னிட்டு, வடநாடு முழுவதிலும் 6-3-2015 முதல் 15-3-2015 வரை, எல்லா ஊர்களிலும் பெருந்திரளாக மக்கள் கூடி, ஆடிப்பாடி மகிழ்ந்து நிறைவு விழாவைக் கொண்டாடினர்.

பஸ்தி, ஒரு மாவட்டத் தலைநகரம். அங்கு நடை பெற்ற நிறைவு விழாவில் 2000 பேர் இரவு 10 மணி வரை இருந்து விழாவை நடத்தினர்.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அத்தொகுதி யின் மக்களவை உறுப்பினர் ஹரிஷ் துவி வேதி பங்கேற்றார்.

டாக்டர் தாவுஜி குப்தா உரைக்குப் பின்னர், வே. ஆனைமுத்து நிறைவுரை ஆற்றினார். பஸ்தியிலிருந்து இரவு 11.15 மணிக்குத் தொடர் வண்டியில் புறப்பட்டு, 16-3-2015 பகல் 1.00 மணிக்குப் புதுதில்லியை அடைந் தார்.

ஒடுக்கப்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளர் கலச. இராமலிங்கம் 16-3-2015 இரவு வே.ஆனை முத்துவுடன் இணைந்து கொண்டார்.

Pin It

1946இல், அரசுக்கு, மேதை அம்பேத்கர் எழுதிய மடல்

(மேதை அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு முதலே, சுயராச்சியத்தில், ஆட்சி அதிகாரம் பார்ப்பனர் கை களுக்கு மாற்றப்படக்கூடாது; சுயராச்சிய (சுதந்தர இந்தியாவுக்கான) அரசமைப்புச் சட்டத்தில் தீண்டப் படாதவர்களுக்கான உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி வந்தார். இதற்காக 1931-இல் வட்டமேசை மாநாட்டில் போராடி, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமையைப் பெற்றார். ஆனால் அதை எதிர்த்து, காந்தியார் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டு, சாவின் விளிம்புக்குச் சென்றதால், அதைக் காட்டிப் பலரும் அச்றுத்தியதால், அம்பேத்கர் பொதுவாக்காளர் தனித் தொகுதியை ஏற்கும் நிலைக் குத் தள்ளப்பட்டார். ஆயினும் அதன்பிறகு தனிவாக் காளர் தொகுதியே தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குக் குறைந்தபட்ச அரசியல் உரிமையையும். பாதுகாப் பையும் தரும் என்று வற்புறுத்தி வந்தார்.

1946ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி அதிகாரத் தை இந்தியர்களுக்குக் கைமாற்றி அளிப்பது குறித்து வழிமுறைகளை வகுப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து கிரிப்° தலைமையில் அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு வந்தது. அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல்பிரபுவும் இக்குழுவில் ஓர் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். அதுசமயம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வைசிராயின் நிருவாகக் குழுவில் அமைச்சராக இருந்தார். அந்நிலையில் 1946 மே 3 அன்று வைசிராய் வேவல் பிரபுவுக்குத் தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்குத் தனிவாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்று விரிவான மடல் எழுதி னார். அதன்பின் 1946 மே 14 அன்று பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக் குழுவின் உறுப்பினர் அலெக் சாண்டர் என்பவருக்கு அம்பேத்கர் எழுதிய அறிவார்ந்த, உரிமை ஆவணமாக அமைந்துள்ள மடலின் தமிழாக் கம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம் : க.முகிலன்).

22, பிருத்திவிராஜ் சாலை, புதுதில்லி

நாள் : மே 14, 1946

அன்பார்ந்த திரு. அலெக்சாண்டர் அவர்களுக்கு,

3. இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்ப்பது, அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் பொறுப் பாகும். என் கவலையெல்லாம், தீண்டப்படாத வர்களின் சிக்கல் மற்றும் அரசமைப்புச் சட்டத்தில் அவர்கள் கோரியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றியதேயாகும். சிம்லாவில் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதிநாளில் அமைச் சரவைத் தூதுக்குழு, முறைப்படி வெளியிட்ட அறிக்கையில், தூதுக்குழு தில்லிக்குத் திரும்பிய பின், சில நாள்களுக்குள் அடுத்து மேற்கொள்ள வுள்ள நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அறிவிப் பைப் பட்டியல் வகுப்பினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் தூதுக்குழு எடுக்கப்போகும் முடிவு தீண்டப்படாத வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அம் முடிவு, தீண்டப்படாதவர்கள் உரிமையுடனும் மகிழ்ச்சி யாகவும் வாழ்வதற்கு வழிவகுக்கப் போகிறதா? அல்லது அவர்களின் வாழ்வுக்குச் சாவுமணி அடிப்பதாக இருக்குமா? அம்முடிவு தீண்டப்படா தவர்களுக்கு வாழ்வா? சாவா? என்பதாக இருக் கும் என்பதால், தீண்டப்படாதவர்களின் சிக்கல் குறித்துச் சில கருத்துகளை உங்கள் கவனத்திற் குக் கொண்டு வர வேண்டியவனாக இருக் கிறேன். இதற்காக நீங்கள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுகின்றேன்.

4. தங்கள் சிக்கலை எதிர்கொண்டு வெல்வது தீண்டப் படாதவர்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது. ஆனால், ஏன் இப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதைக் கீழ்குறித்துள்ள உண்மைகளைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். தீண்டப்படாதவர்களுக்குக் கொடுமை யையும் அநீதியையும் இழைத்துவருவது குறித்து வெட்க உணர்ச்சியற்ற - அதேசமயம் பகை மனப் போக்கு கொண்ட மாபெரும் எண்ணிக்கையி லான இந்துக்கள் கூட்டம், தீண்டப்படாதவர்களைச் சூழ்ந்து நிற்கிறது. அதனால், அன்றாட வாழ்வில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைந்திட தீண்டப்படாதவர்கள், ஆட்சி செய்யும் நிருவாகத்தின் உதவியைக் கோருகின்றனர்.

ஆனால் ஆட்சி நிருவாகத்தின் கட்டமைப்பும், இயல்பும் எவ்வாறு இருக்கின்றன? சுருங்கச் சொல்வ தாயின், இந்திய ஆட்சி நிருவாகம் முழுவதும் இந்துக் களிடம் இருக்கிறது. அது அவர்களின் முற்றுரிமையாக உள்ளது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்துக்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறைகூட இல்லை. காவல் துறை, உயர் அதிகாரத் துறை, வருவாய்த்துறை என ஆட்சி நிருவாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிருவாகத்தில் உள்ள இந்துக்கள் பொது சமூக நலனில் நாட்டம் கொண்ட வர்களாக இல்லை என்பது மட்டுமின்றி, சமூகத்தின் பொதுநலனுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள்; தீண்டப்படாதவர்களுக்குக் கேடுகள் பல புரிகின்றனர் என்பனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

தீண்டப்படாதவர்களைப் பாகுபாடாக நடத்துவது, சட்டப்படி யான பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுப்பது, அவர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்கு முறைகளிலிருந்து பாதுகாப்புத் தரும் சட்டங்களைச் செயல்படவிடாமல் தவிர்ப்பது ஆகியவை இந்துக் களின் குறிக்கோளாக இருக்கின்றன. இதன் விளை வாகத் தீண்டப்படாதவர்கள், சமுதாயத்தில் பெரும் பான்மையினராக உள்ள இந்துக்களுக்கும், இந்துக் களின் ஆதிக்கத்தில் உள்ள நிருவாகத்துக்கும் இடை யில் சிக்குண்டுத் தவிக்கின்றனர். ஒருபுறம் இந்துக்கள் சமூக நிலையில் தீண்டப்படாதவர்களைப் பலவகை யிலும் கொடுமைப்படுத்துகின்றனர். மறுபுறம், பாதிக் கப்பட்டவர்களைக் காப்பதற்குப் பதிலாக இந்து-நிருவாகம் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறது.

5. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, காங்கிர சின் சுயராச்சியம் தீண்டப்படாதவர்களுக்கு எப் படிப்பட்டதாக இருக்கும்? ஒன்று மட்டும் தெளி வாகத் தெரிகிறது. இப்போது நிருவாகம் மட்டும் இந்துக்களிடம் இருக்கிறது; சுயராச்சியத்திலோ, சட்டங்கள் இயற்றும் அதிகாரம் கொண்ட சட்ட சபையும் நிருவாகமும் இந்துக்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஆகவே சுயராச்சிய ஆட்சியில் தீண்டப் படாதவர்களின் துன்பங்கள் மேலும் அதிகமாகும் என்பது சொல்லாமலே விளங்கும்.

இனி, தீண்டப் படாதவர்கள் வன்மம் கொண்ட நிருவாகத்தை எதிர்கொள்வதுடன், அவர்களின்பால் பரிவு உணர்ச்சி இல்லாத இந்துக்கள் நிறைந்த சட்டமன்றத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்ட அவையும், நிருவாகமும் தீண்டப்படாதவர்கள் மீது பாகுபாடு காட்டி, நஞ்சை உமிழ்ந்து, கடுமையாக ஒடுக்கு வனவாகவே இருக்கும். இதையே வேறு வகையில் சொல்வதானால், காங்கிரசு முன்வைக்கும் சுயராச்சியத்தில், இந்து மதத்தாலும் இந்துக் களாலும் சுமத்தப்பட்ட இழிவுகளிலிருந்து தீண்டப் படாதவர்கள் தப்பிப்பதற்கான வழியேதும் இருக்காது.

6. காங்கிரசின் சுயராச்சியம் தீண்டப்படாதவர் களுக்குப் பெருங்கேடானதாக அமைவதைத் தடுக்க, சட்ட அவையில் (நாடாளுமன்றத்தில்) தங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று தாழ்த்தப் பட்ட மக்கள் கோருவதன் நியாயத்தை நீங்கள் ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்பு கிறேன். அதேபோன்று (வைசிராயின்) நிர்வாக அவையிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் இருந்தால்தான், அவர்களது முன்னேற்றத்துக் கான திட்டங்களை வகுக்கவும், அரசு வேலை களில் உரிய பிரதிநிதித்துவம் பெறவும் முடியும். அந்நிலையில்தான் அரசு நிருவாகம் முற்றிலும் அவர்களுக்கு எதிரானதாக இருக்காது.

அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீண்டப்படாதவர்கள் கோருவதன் நியாயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதாயின், தீண்டப் படாதவர்கள் தனி வாக்காளர் தொகுதி முறையை ஏன் கேட்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். சட்டமன்றத்தில் (சட்டங்களை இயற்றும் அவை என்ற பொருளில்-மொழிபெயர்ப்பாளர்) தீண்டப்படாதவர்கள் சிறுபான்மையாகவே இருப்பார்கள்.

அவர்கள் அவ்வாறு இருக்கும் வகையில்தான் இந்தச் சமூகத்தின் விதி இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்ட தன்மையிலும் நிலையாகவும், பெரும்பான்மையினராகவுள்ள - வகுப்புவாதச் சிந்தனை கொண்ட சாதி இந்துக்கள் தீண்டப்படாதவர்களை ஆதரிப்பவர்களாக மாற்ற முடி யாது. தீண்டப்படாதவர்களால் அதிகபட்சமாக ஒன்று செய்ய முடியும். அதாவது எந்த விதிமுறைகளின் (Terms) அடிப்படையில், பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் தீண்டப்படாத வர்கள் இருப்பார்கள். அந்த விதிமுறைகளை இந்துக் கள் உருவாக்கித் தீண்டப்படாதவர்கள் மீது திணிக்க முடியாது.

இரண்டாவதாக, இந்துக்கள், தீண்டப்படாதவர் களுடன் சேர்ந்து பணியாற்ற மறுக்கின்ற போதும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட நடவடிக்கை எடுக்காத போதும், தீண்டப்படாதவர்கள் பெரும்பான்மையினர்க்கு எதிராகத் தங்கள் கண்டனத் தைச் சட்டமன்றத்தில் சுதந்தரமாகப் பதிவு செய்ய முடியும். இவ்வாறு எதிர்த்துக் கருத்துரைக்கும் சுதந்த ரத்தைத் தீண்டப்படாதவர்கள் பேணிக்காத்துக் கொள்ளுதல் எப்படி? அதற்கு ஒரே வழிதான் உள்ளது. தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையி னரின் (சாதி இந்துக்களின்) வாக்குகளைச் சார்ந் திருக்கும் நிலை இருக்கக்கூடாது. தனி வாக்காளர் தொகுதி கேட்பதன் அடிப்படை இதுவே ஆகும்.

7. தனி வாக்காளர் தொகுதி முறை ஒன்றே தீண்டப் படாதவர்களைப் பாதுகாக்கும்; பயன்தருவதாக இருக்கும். இதைத் தராமல், வேறெந்தப் பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும், அவற்றால் உமியளவு பயனும் விளையாது. தனி வாக் காளர் தொகுதி தான் தீண்டப்படாதார் சிக்கலின் உயிரான கூறு ஆகும். 1946 ஏப்பிரல் 9 அன்று, அமைச்சரவைத் தூதுக் குழுவினர், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று அரிஜன்களிடம் பேட்டி கண்டனர். அப்போது அம்மூவரும் குழுவிடம் அளித்த அறிக்கையின் படிகள் என்னிடம் உள்ளன. அவர்கள் பட்டியல் வகுப்பினரின் முழு ஆதரவு பெற்ற பிரதிநிதிகளா? என்ற வினாவை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்.

காங்கிரசின் மூன்று அரிஜன்கள் அளித்த அறிக்கையில் உள்ள கோரிக்கைகளுக்கும் பட்டியல் வகுப்பினர் பேரவையின் சார்பில் நான் அளித்த அறிக்கையில் உள்ள கோரிக்கைகளுக் கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அவர் களுடைய அறிக்கையில் இல்லாத ஒரு கோரிக்கை, நான் அளித்த அறிக்கையில் இருக்கிறது. அதுதான் தனி வாக்காளர் தொகுதி! காங்கிரசு அரிஜன்களின் கோரிக்கைகளை நீங்கள் எந்தத் தன்மையில் புரிந்துகொள்ளப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவை கோரிக்கைகளே அல்ல. காங்கிரசுக் கட்சி, தீண்டப்படாத வகுப்பினருக்கு, அரசியல் பாது காப்பு என்ற பெயரால் எதை அளிக்க எண்ணி யுள்ளதோ அதைத்தான் அம்மூன்று காங்கிரசு அரிஜன்கள் கூறியுள்ளனர்.

இது என்னுடைய புரிதல் மட்டுமன்று. இது நான் திட்டவட்டமாக அறிந்துள்ள செய்தியாகும். காங்கிரசின் எண்ணவோட்டத்தை நன்கு அறிந்துள்ள சிலர் என் னிடம், நீங்கள் பொதுவாக்காளர் தொகுதி முறையை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், காங்கிரசு என்னுடைய மற்ற கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். பட்டியல் வகுப்பினரின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற் பதற்குத் தயாராக உள்ள காங்கிரசு, தனிவாக்காளர் தொகுதி என்கிற ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என்பது உங்களுக்கு வியப்பானதாக இருக்கலாம். காங்கிரசு எந்த நோக்கத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், இதில் வியப்பதற்கு ஏதுமில்லை என்பது தெரியும்.

உண்மையில் இது உள் ஆழங்கொண்ட விளை யாட்டு. தீண்டப்படாதவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற கட்டாயச் சூழ்நிலையிலிருந்து இனி தப்பிக்க முடியாது என்பது காங்கிரசுக் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. அதனால், பெரும் பயனைத் தராத தன்மையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிப்பதற்கான வழியைக் காங்கிரசு தேடுகிறது. பொதுவாக்காளர் தொகுதி முறை யை அடித்தளமாகக் கொண்ட நிலையில் செய்யப்படும் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாட்டாலும் பயன் ஏதும் விளையாது என்பதைக் காங்கிரசு தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் காங்கிரசு பொது வாக்காளர் தொகுதியை வலியுறுத்துகிறது. பொது வாக்காளர் தொகுதி என்பது அதிகாரம் அற்ற பதவியைத் தீண்டப்படாதவர்களுக்கு அளிப்ப தாகும். தீண்டப்படாதவர்கள் அதிகாரத்துடன் கூடிய பதவிகள் வேண்டும் என்கின்றனர். தனி வாக்காளர் தொகுதி மூலமே அதிகாரம் கொண்ட பதவிகளை அடைய முடியும். அதனால்தான் அவர்கள் அதை வற்புறுத்துகின்றனர்.

8. பட்டியல் வகுப்பினரின் தனிவாக்காளர் கோரிக் கைக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக நான் நம்புகிறேன். காங்கிரசுக் கட்சி தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் இதை ஒப்புக் கொள்கின்றன. வேவல் பிரபுவுக்கு (வைசிராய்) 1946 மே 3 அன்று நான் எழுதிய மடலில் தனி வாக்காளர் தொகுதியின் தேவைக்கான காரணங்களைத் தெள்ளத்தெளி வாகக் கூறியுள்ளேன். அம்மடலை நீங்கள் படிப் பதற்காக அவர் கொடுத்திருப்பார். எனவே அக் காரணங்களை மீண்டும் இங்குக் கூறவேண்டாம் என்று எண்ணுகின்றேன்.

இப்போதுள்ள கேள்வி : பட்டியல் வகுப்பினரின் தனிவாக்காளர் கோரிக்கை மீது அமைச்சரவைத் தூதுக்குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது? இந்துக் களின் அரசியல் நுகத்தடியிலிருந்து தீண்டப்படாதவர் களை விடுவிக்கப் போகிறார்களா? இந்துக்களின் பிரதி நிதியாக உள்ள காங்கிரசிடம் நட்பு பாராட்டுவதற்காகப் பொது வாக்காளர் முறையை ஆதரித்து, தீண்டப் படாதவர்களை ஓநாய்களின் முன் வீசி எறியப் போகி றார்களா? பிரித்தானியர்கள் வெளியேறுவதற்குமுன், மேன்மைதங்கிய மன்னரின் அரசு, சுயராச்சியம் தீண்டப்படாத வகுப்பினரின் குரல்வளையை நெரிப்ப திலிருந்து தடுத்து நிறுத்துவதற்குரிய தக்க ஏற்பாடு களைச் செய்ய வேண்டும் என்று மேன்மைதங்கிய பிரித்தானிய அரசை வலியுறுத்துவதற்குத் தீண்டப் படாதவர்களுக்கு முழுஉரிமை உள்ளது.

9. பட்டியல் வகுப்பினரின் நலன்களைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன். எல்லாச் சிறுபான்மையினர் குறித்தும் இதே தார்மீகப் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இதைக் காரணமாகக் காட்டி, தீண்டப்படாதவர்களுக்கான தார்மீகப் பொறுப்பைப் பிரித்தானிய அரசு, தட்டிக் கழிக்க முடியாது. தீண்டப்படாதவர்கள் தொடர் பாகப் பிரித்தானிய அரசுக்குள்ள தார்மீகப் பொறுப்பு குறித்து பிரித்தானியர்களில் மிகச் சிலரே அறிந் திருக்கின்றனர் என்பதும், அப்பொறுப்பை நிறை வேற்ற வேண்டும் என்று சிலரே கருதுகின்றனர் என்பதும் வருந்தத்தக்க நிலையாகும்.

தீண்டப்படாதவர்கள் செய்த உதவியால்தான் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி நிலைகொண் டது. ஆனால் இராபர்ட் கிளைவ், வாரன்ஹே°டிங், கூட் போன்றவர்களால்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என்று பல பிரித்தானியர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் பிழையான கருத்தாகும். இந்தியர்களைக் கொண்ட ஒரு படையால் தான் பிரித்தானியர் இந்தியாவை வென்றனர். அந்தப் படையில் இருந்த அனை வரும் தீண்டப்படாத வகுப்பினரே ஆவர். தீண்டப் படாதவர்களின் இந்த உதவி கிடைக்காமல் போயிருந்தால், பிரித்தானியரால் இந்தியாவைக் கைப்பற்றியிருக்க முடியாது. பிரித்தானிய ஆட்சிக் குக் கால்கோள் இட்டப் பளிhசிப் போராயினும், அந்த வெற்றியை முடித்து வைத்த கிர்க்கீ போராயினும், அவற்றில் பிரித்தானியருக்காகப் போரிட்டவர்கள் தீண்டப்படாதவர்களே ஆவர்.

10. இவ்வாறு பிரித்தானியருக்காகப் போரிட்ட தீண்டப் படாதவர்களுக்காகப் பிரித்தானிய ஆட்சி என்ன செய்தது? அது ஒரு வெட்கக்கேடான கதையாகும். தீண்டப்படாதவர்களைப் படையில் சேரவிடாமல் தடுத்ததுதான் அவர்கள் செய்த முதல் வேலை. இதுபோன்ற பரிவு உணர்ச்சியற்ற, செய்ந்நன்றி மறந்த, கொடிய செயல் வேறெதையும் வரலாற் றில் காணமுடியாது. படையின் நுழைவாயில் கதவுகள் தீண்டப்படாதவர்களுக்கு மூடப்பட்ட போது, இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி நிறுவப் படுவதற்கும், 1857இல் எழுந்த சிப்பாய்க் கழகத் தின் போது, இந்தியாவின் சிற்றரசுகளின் வலிமையான கூட்டுப்படையை முறியடிப்பதிலும் தீண்டப் படாதவர்கள் ஆற்றிய ஒப்பரிய பங்களிப்பை, பிரித்தானியர் கருத்தில் கொள்ளத்தவறிவிட்டனர். படையில் சேருவதற்குத் தடைவிதிப்பதன் விளை வாகத் தீண்டப்படாதவர்கள் வாழ்வில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கிஞ்சிற்றும் எண் ணிப் பார்க்காமல், ஒரே ஒரு கையொப்பத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த னர். அதன்மூலம் அவர்களைப் பழைய இழிந்த வாழ்நிலைக்குத் தள்ளினர்.

தீண்டப்படாதவர்கள், அவர்களுடைய சமூக இயலாமைகளிலிருந்து மீள்வதற்கு எந்த வகை யிலேனும் பிரித்தானியர் உதவி செய்தார்களா? இதற்கான விடை, ‘இல்லை’ என்பதாகவே இருக் கிறது. பள்ளிகள், நீர் மொள்ளும் கிணறுகள், பொது இடங்கள் முதலானவற்றிலும் தீண்டப் படாதவர்கள் தடைசெய்யப்பட்டனர். அரசின் பொதுப் பணத்தைக் கொண்டு நிருவாகம் செய்யப் படும் எல்லா இடங்களிலும் இந்நாட்டின் குடி மக்கள் என்ற அடிப்படையில் தீண்டப்படாத வர்கள் நுழைவதற்கான உரிமையை நிலை நாட்டியிருக்க வேண்டியது பிரித்தானிய அரசின் கடமையாகும். ஆனால் பிரித்தானியர் இத்திசை வழியில் எதுவும் செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால், தீண்டாமை எங்கள் ஆட்சிக் காலத்தில் உருவானதல்ல; அதற்கு முன்பிருந்தே இருந்து வருவதாகும் என்று கூறி, தங்களின் கடமை தவறியமைக்கு நியாயம் கற்பிப்பதாகும்.

தீண்டாமை பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதன்று என்பது உண்மைதான். ஆனால் இன்று ஆளுகின்ற அரசு என்ற முறையில், தீண்டா மையை ஒழிக்க வேண்டியது என்பது அரசின் நீங் காக் கடமையல்லவா? தான் செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் பற்றிய பொறுப்புணர்ச்சி உடைய எந்தவொரு அரசும், அவற்றைத் தட்டிக்கழிக்காது. பிரித்தானிய அரசு என்ன செய்திருக்கிறது? இந்து சமூகத்தைச் சீர்திருத்தம் செய்வது தொடர்பான எந்தவொரு சிக்கல் குறித்துச் சிந்திக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய அரசு மறுத்து வந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சி ஏற்படுவதற்குமுன், இந்தியாவில் இருந்த ஆட்சிகளின் கீழ், தீண்டப்படாத மக்கள் கடுமையாக உழைத்தும் கொடுந்துன்பங் களுடன் வாழ்ந்து மடிந்தனர். சிதைக்கப்பட்ட - மறக் கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள். சமூக சீர்திருத்தம் என்பதைப் பொறுத்தமட்டில், பிரித்தானிய அரசுக்கும், அதற்குமுன் இருந்த ஆட்சி களுக்கும் இடையே முதன்மையான வேறுபாடு எதுவும் இல்லை என்றே தீண்டப்படாத வகுப்பினர் கருது கின்றனர்.

அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கூட வெறும் பெயரளவினதாகவே இருக்கிறது. இந்துக் களின் ஆதிக்கமும் அதிகாரமும் எப்போதும் போலவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. பிரித்தானிய ஆட்சியோ இக்கேடான நிலையை ஒடுக்குவதற்கு மாறாக, அதை ஊட்டி வளர்க்கிறது. சமுதாயக் கண் ணோட்டத்தில் பார்த்தால், பிரித்தானியர் இந்தியாவில் ஆட்சியை நிறுவியபோது, இந்தியாவில் சமூக அமைப்பு எப்படி இருந்ததோ, அதை அப்படியே பேணிக்காப்ப தில், சீனாவின் தையல்காரரின் கதையைப் போல கண்ணுங்கருத்துமாக இருந்து வந்துள்ளனர் என்பது புலனாகும். சீனாவின் தையல்காரரிடம் கோட்டு தைப் பதற்கான புதிய துணியைக் கொடுத்து, அடையாளத் திற்காகப் பழைய கோட்டும் கொடுக்கப்பட்டது. அந்தப் பழைய கோட்டு, குடுகுடுப்பைக்காரனின் கோட்டு போல பல இடங்களில் ஒட்டுத்துணி வைத்துத் தைக் கப்பட்டிருந்தது. சீனத் தையல்காரன் பழைய கோட் டில் எந்தெந்த இடங்களில் ஒட்டுப்போட்டுத் தைக்கப் பட்டிருந்ததோ அதேபோல புதிய கோட்டைத் தைத் தான். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன?

பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் கடந்த பின்னும் தீண்டப்படாதவர் கள், தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகள் களை யப்படவில்லை. அவர்களுடைய முன்னேற்றத் திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் தடை போடப் படுகிறது பிரித்தானிய ஆட்சி, உண்மையில் இந்தியாவில் எதையேனும் சாதித்திருக்கிறது என்று சொல்ல வேண்டுமானால், பார்ப்பனியத் துக்கு உரமூட்டி, அது புதுவலிமையுடன் கிளர்ந் தெழச் செய்திருப்பதைத்தான் கூறவேண்டும். வரலாறு நெடுகிலும் தீண்டப்படாதவர்களின் கொடிய எதிரியாகப் பார்ப்பனியம் செயல்பட்டு வந்துள்ளது. தீண்டப்படாதவர்கள் காலங்கால மாக அனுபவித்து வரும் எல்லா வகையான துன்பங்களுக்கும் மூலமாக இருப்பது பார்ப் பனியமே ஆகும்.

11.          பிரித்தானியர் தங்கள் ஆட்சியைத் துறந்துவிட்டு, இந்தியாவிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதை அறிவிப்பதற்காகத்தான் அமைச்சரவைத் தூதுக் குழு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், “இந்தியாவின் ஆட்சியையும் அதிகாரத்தையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்?” என்று தீண் டப்படாதவர்கள் பிரித்தானியரை நோக்கி எழுப்பு கின்ற வினா தவறானது என்று எவரும் கூறமுடி யாது. பார்ப்பனியத்திற்குத் தலைமை தாங்குபவர் களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கப் போகி றீர்களா? அவர்கள்தான் தீண்டப்படாதவர்களை அடக்கி ஒடுக்கும் கொடுங்கோலர்கள்!

இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தை இவ்வாறு கைமாற்றுவது பற்றி இங்கி லாந்தில் உள்ள மற்ற கட்சியினர்க்கு மனஉறுத்தல் ஏதும் இதுக்காது. ஆனால் (ஆளும்) தொழிற்கட்சியின் நிலைப்பாடு என்ன? உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதே தன் குறிக்கோள் என்று தொழிற்கட்சி சொல்லிக் கொள்கிறது. அவ்வாறு சொல் லிக் கொள்வது உண்மையாக இருக்குமாயின், தொழிற் கட்சி, 6 கோடி தீண்டப்படாதவர்களின் பக்கம் நிற்கும் என்றும், தீண்டப்படாதவர்களுக்கு உரிய பாதுகாப்புச் செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளும் என்றும் நான் நம்புகின்றேன். அதேபோல், மதத்திலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவோரிடம் ஆட்சி அதிகாரம் செல்லவிடாமல் தடுக்கும் என்றும் நம்புகிறேன். அவர்கள் ஆள்வதற்கு உரிமையும், தகுதியும் அற்ற வர்கள்; மேலும் தீண்டப்படாதவர்களின் எதிரிகள். ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தீண்டப்படாத வர்களின் பாதுகாவலன் என்று தொழிற்கட்சி கூறி வந்தது. இதுவரையில் (இருநூறு ஆண்டுகளாக) தீண்டப்படாதவர்களின் துயர் துடைத்திட, பிரித்தானிய ஆட்சி எதுவும் செய்யாமல், அவர்களைப் புறக்கணித் ததற்குக் கழுவாய் தேடும் செயலாகவே தனிவாக் காளர் தொகுதி தருவது அமையும்.

12. தீண்டப்படாதவர்களின் எதிர்காலம் பற்றிய அச்ச வுணர்வு காரணமாக இவ்வளவு நீண்ட மடலை நான் எழுத நேரிட்டது. அரசமைப்புச் சட்டப் பாது காப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற தீண்டப் படாதாரின் கோரிக்கை குறித்துக் கருத்து ஏதும் கூறாமல் அமைச்சரவைத் தூதுக் குழு அமைதி யாக இருப்பதே என் கவலைக்குக் காரணமாகும். தீண்டப்படாதவர்களுக்கும் மற்ற சிறுபான்மையி னருக்கும் மேன்மைதங்கிய மன்னரின் அரசு அளித்த வாக்குறுதிகள் குறித்து, தற்போது தூதுக் குழு கொண்டுள்ள மனப்போக்கு என் அச்சவுணர்வை அதிகப்படுத்தியது. தூதுக்குழுவின் மனப் போக்கு, பால்மெர்ஸ்டன் பிரபு ஒருமுறை கூறிய தை நினைவூட்டுகிறது. “எங்களுக்கு நிலையான எதிரிகளும் இல்லை, எங்களுக்கு நிலையான பகைவர்களும் இல்லை” என்று பால்மெர்ஸ்டன் பிரபு கூறினார்.

பால்மெர்ஸ்டனின் கூற்றைத் தூதுக்குழு வழி காட்டியாகக் கொள்ளப் போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ள சூழலில், தீண்டப்படாதவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து எந்த அளவுக்கு அஞ்சுவார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் இங்கிலாந்தில், அடித்தட்டு வர்க்கத்திலி ருந்து பிறந்து வளர்ந்தவர். ஆறு கோடி தீண்டப்படாத மக்களுக்குச் செய்யக்கூடிய நம்பிக்கைத் துரோகத் தைத் தடுத்து நிறுத்திட உங்களால் இயன்றதனைத் தும் செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக் கிறது. அதனால்தான் தீண்டப்படாதாரின் பிரச்சனை குறித்து உங்களுக்கு எழுதிட எண்ணினேன். தூதுக் குழுவில் உங்களை விடச் சிறந்த நண்பர் தங்களுக்கு இல்லை என்று தீண்டப்படாதவர்கள் கருதுகிறார்கள் என்பதை இங்குப் பதிவு செய்திட என்னை அனுமதிக்க வேண்டுகின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர். அம்பேத்கர்

(குறிப்பு : இம்மடலின் தொடக்கத்தில் உள்ள 1, 2 எண் கொண்ட பத்திகள் இந்து-முசுலீம் ஒற்றுமைக்கான முயற்சி பற்றியவை என்பதா லும், கட்டுரையின் நீளம் கருதியும் மொழிபெயர்க் கப்படவில்லை. ‘அம்பேத்கர் மடல்கள்’ என்ற ஆங்கில நூலில் 127ஆவது மடல் இது. 1913 முதல் 1956 வரை அம்பேத்கர் எழுதிய மடல் களில், 178 மடல்கள் மட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுரேந்திர அஜ்நாத் என்பவரால் தொகுக்கப்பட்ட ‘அம்பேத்கர் மடல்கள்’ நூல் 1993இல் வெளிவந்தது. இந்த 127ஆவது மடல் முதன்முதலாக தமிழில் வெளியிடப்படுகிறது.)

Pin It

ஆரியம் விரித்த பொய்யில்

                ஆழ்ந்திட்ட தமிழர் தம்மை

கூரிய ஈட்டி கொண்டு

                குடைந்தவர் பெரியார்; அந்த

நேரிய தலைவ ருக்கு

                நீவாய்த்தாய் கைவாள் போலே!

ஊரெலாம் உனது பாட்டை

                உருப்போட லானார் மக்கள்

குயில்போலக் கூவும் பாட்டும்

                கொட்டுமுர சார்க்கும் பாட்டும்

வயல்வெளி நடவுப் பாட்டும்

                வான்நிலா அழகுப் பாட்டும்

மயில்நிகர் பெண்கள் பாட்டும்

                மழலைக்குப் பாப்பா பாட்டும்

வெயிலில்காய் மக்கள் பாட்டும்

                வெடிப்புறத் தந்த வன்நீ!

பாய்ச்சும்கூர் வேலைப் போலே

                பகைவர்மேல் பாய்ந்தாய்; கன்னல்

காய்ச்சுநேர் சுவைத் தமிழ்மேல்

                கடல்போலும் ஆசை வைத்தாய்

மூச்செலாம் தமிழே; என்றன்

                முழுவாழ்வும் தமிழே என்றாய்

வீச்சரிவாள் போலும் தாக்கம்

                விளைப்பன உனது பாக்கள்

உழைப்பாளர் மேன்மை சொன்ன

                ஒருபுலவ! தம் குடும்பத்

தழைப்பாளர் பெருகிப் போனார்

                தமிழ்நாட்டில்; தத்தம் சாதிப்

பிழைப்பாளர், மதத்தைச் சொல்லிப்

                பிளப்பாளர் மிகுந்தார்; தீமை

இழைப்பாளர் தம்மை வீழ்த்த

                எடுப்போம்உன் கொலைவாள் தன்னை!

Pin It