நமது சமூகம் அரோப்பிய சமூகம் போன்ற வளர்ச்சி நிலைகளை கொண்டது கிடையாது என்பது வரலாறு. மாமேதை காரல் மார்க்ஸ் இதைதான் ஆசிய பாணி உற்பத்தி முறை என்று குறிப்பான சமூகமாக வரையறை செய்து எழுதினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் சாதிய சமூகம் நிலவுகிறது. சாதியம் வர்க்கமாகவும், சமூக பிரிவுகளாகவும், தனித்தனியான பிளவுண்ட குழுக்களாகவும் மக்களை பிரித்து அதற்கு கோட்பாட்டு நியாயங்களை வழங்கி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி வருகிறது. உழைப்பை சுரண்டி சுயமரியாதை, சமூக நீதியை மறுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்கிறது
இன்றும் பார்ப்பனீய சனதன கார்ப்பரேட் பாசிசத்திற்கு சமூக அடித்தளமாக சாதி பிரிவுகள் இருப்பதை ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் செயல்பாடுகள் உணர்த்துகின்றன. இதை ஆழமாக புரிந்து கொள்ள சாதியும் வர்க்கமும் பற்றிய கருத்தரங்கிற்கு அனைவரும் வருக
சாதி ஒழியட்டும்! சமத்துவம் மலரட்டும்!!
சாதி ஒழிப்பு இயக்கம் (CAM) நடத்தும் கருத்தரங்கம்
தலைப்பு: சாதியும் வர்க்கமும்
சிறப்புரை: தோழர் சங்கர், மேற்கு வங்காளம், , தலைமை அரசியல் குழு உறுப்பினர்-இகக மாலெ ரெட் ஸ்டார்
தோழர் மனோகரன், தமிழ்நாடு செயலாளர்-இகக மாலெ ரெட் ஸ்டார்
தோழர் எமன், திருவள்ளுவர் மாவட்ட அமைப்பாளர்- இகக மாலெ ரெட் ஸ்டார்
தலைமை: சட்டக்கல்லூரி மாணவர் தமிழ் முரசு, சென்னை மாவட்ட அமைப்பாளர் சாஒஇ
வரவேற்புரை: எழுத்தாளர் கி.நடராசன், சாஒஇ
நன்றியுரை: தோழர் வீரதமிழ்தேசிய தமிழர், சாஒஇ
நாள்: 18-07-2023 செவ்வாய்கிழமை,
நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம் : பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கம், எழும்பூர், சென்னை. (காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரில் )
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
தோழமையுடன்
- அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கம் (CAM)
ALL INDIA CASTE ANNILATION MOVEMENT