தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நுழைய,  நீட் எனும் அகில இந்திய தேர்வை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியது. இத்தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இன்றையத் தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான பாதிப்பினை அறிய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து மக்களிடம் கருத்து கோரியுள்ளது.
 
"கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு & புதுச்சேரி" சார்பில், *"நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா? பொதுமக்கள் கருத்துக் கேட்பு" எனும் ஆய்வு இன்று 28.06.2021 முதல் தொடங்கப்படுகிறது.* இந்த ஆய்வு "இணையவழி கூகுள் படிவம்" மூலம் 3 நிமிடங்களுக்குள் எளிமையாக தமிழில் பூர்த்தி செய்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வு முடிவுகள் தொகுக்கப்பட்டு மக்களின் வெளிப்படையான எண்ணங்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆகவே, கீழேயுள்ள இணைப்பினைச் சொடுக்கி தங்கள் கருத்தினைப் பதிவு செய்திட வேண்டுகிறோம்.
 
 
தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக இம்மாபெரும் கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்கள் கருத்தை வெளிப்படுத்துமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
 
இதனைப் பரந்துபட்ட அளவில் பகிரவும்.
 
நன்றி.
 
- கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு & புதுச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It