தோழர் முகிலன் எங்கே? - ஆலோசனைக் கூட்ட முடிவுகள்
25-02-0219 காலை 11 மணி அளவில் நிருபர்கள் சங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் மற்றும் விவரங்கள்:
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடதுசாரி இயக்கத்தில் முழுநேர செயற்பாட்டாளராகப் பணியாற்றி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு எனச் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களிலும், எழுவர் விடுதலை, காவிரி உரிமை மீட்பு என தமிழ்த்தேசியப் போராட்டக் களங்களிலும் செயல்வீரராக திகழும் தோழர் முகிலன் நிலை என்னாயிற்றோ என்று தமிழ்நாட்டில் உள்ள சனநாயக ஆற்றல்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். தோழர் முகிலன் சிறைக்கு செல்ல அஞ்சுபவரோ காவல் துறை பதிவு செய்யும் பொய் வழக்குகளுக்கு பயந்தவரோ அல்ல. நாட்கணக்கில் மாதக் கணக்கில் சிறையிலடைக்கப்பட்டும், காவல் துறை தாக்குதலுக்கு உள்ளாகியும் அவற்றையெல்லாம் துணிவுடன் எதிர் கொண்டது மட்டுமின்றி காவல் அடக்குமுறைக்கு பயந்தோ அல்லது மணல் மாஃபியா கும்பல்களுக்கு, நாசகார வேதாந்தா குழுமத்துக்குப் பயந்தோ தனது செயல்பாட்டை ஒருபோதும் நிறுத்தியதில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழக காவல் துறையின் திட்டமிட்ட சதிகளை அம்பலப்படுத்தும் ஆவணப் படத்தை கடந்த பிப்ரவரி 15, வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தோழர் முகிலன் அன்றிரவில் இருந்து காணவில்லை.
உடனே, தோழர் பொன்னரசு, முகிலனின் மகன் கார்முகில் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் ஆகிய மூவர் காவல்துறையில் புகார் அளித்தனர். பிப்ரவரி 18 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் கண்காணிப்பகத்தால் ஆட்கொணர்வு மனு(369/2019) போடப்பட்டது. பிப்ரவரி 22 அன்று காவல்துறை தரப்பில் இருந்து விழுப்புரம் மாவட்டம் ஒலுக்கூர் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரத்தில் மற்றொரு சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். முகிலன் பயன்படுத்திய செல்பேசி எண் காஞ்சிபுரம் வரையில் செயல்பாட்டில் இருந்ததாகவும் ஒலுக்கூரை ஒட்டி அவரது செல்பேசி துண்டிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறை தரப்பில் இருந்து 15-2-2019 அன்று இரவு தோழர் முகிலன் எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டதாகவும் மீண்டும் இரயில் நிலையத்திற்கு உள்ளே வந்ததற்கான சி.சி.டி.வி. பதிவுகள் இல்லை என்று காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர் F-2 காவல் நிலைய ஆய்வாளர், திருவல்லிகேணி உதவி காவல்துறை ஆணையர் ஆகிய இருவரும் இதனை விசாரித்து மார்ச் 4 ஆம் தேதி அன்று நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆணைப் பிறப்பித்துள்ளது.
தோழர் முகிலன் காணாமல் போய் பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவரைத் தேடுவதற்கான முயற்சியில் தமிழக காவல்துறையும் இறங்கியதாக தெரியவில்லை. அவர் உயிருக்கு தீங்கு நேருமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களையும் மக்கள் இயக்கங்களையும் கவலை கொள்ளச் செய்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையோ அல்லது ஆலையின் தூண்டுதலால் தமிழக காவல் துறையோ அல்லது மத்தியப் புலனாய்வுத் துறையோ அல்லது 15-2-2019 தோழர் முகிலனால் அம்பலப்படுத்தப்பட்ட தென்மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி மண்டல காவல்துறைத் துணைத் தலைவர், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரோ தோழர் முகிலன் காணாமல் போனதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு தோழர் முகிலனுடைய உயிருக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இன்று 25-02-2019 அன்று அனைத்து அரசியல் இயக்கங்கள், கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் இணைந்து அடுத்த கட்ட நகர்வை நோக்கி விவாதித்து கூட்டாக முடிவெடுப்பதற்கு சென்னை சேப்பாக்கத்தில் நிருபர்கள் சங்கத்தில் கூடியுள்ளோம். நம் அனைவருடைய ஒருமித்த ஒரே கோரிக்கை காணாமல் போன முகிலனைக் கண்டுபிடித்து தர வேண்டியது தமிழக அரசுடைய பொறுப்பு என்பதே ஆகும்.
தீர்மானங்கள்:
- ’முகிலன் எங்கே?’ என்பதை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
- NCHRO வின் தேசிய தலைவர் அ.மார்க்ஸ் தலைமையில் தோழர் முகிலன் காணாமல் இருப்பது குறித்து அறிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- மார்ச் 02 அன்று மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் காலை 10 மணி அளவில் ‘தமிழக அரசே! முகிலன் எங்கே?’ என்ற தலைப்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் எவ்வித கட்சிக் கொடி அடையாளங்கள் இன்றி முகிலனின் புகைப்படத்துடன் ‘எங்கே முகிலன்?’ என்ற முழக்கத்துடன் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத் தலைநகரங்களில் வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் அதே நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
- நீதிமன்றம் கொடுத்துள்ள மார்ச் 4 வரையான கெடுவுக்குள் தமிழக காவல்துறை தோழர் முகிலனை ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிலையில் மீண்டும் இவ்வமைப்புகள் கூடி அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்யும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தலைமை;
ஆர்.நல்லகண்ணு, சி.பி.ஐ.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றத் தோழர்கள்:
டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., திமுக
அந்தேரிதாஸ், ம.தி.மு.க.
சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், சி.பி.ஐ.
வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர், விசிக
தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்
அப்துல் சமது,பொதுச் செயலாளர், மமக
ஏ.எஸ். உமர் பாருக், மாநிலப் பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ.
உமாபதி, சென்னை மாவட்டச் செயலாளர், திவிக
குமரன், சென்னை மாவட்டச் செயலாளர், தபெதிக
பொழிலன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி
தியாகு, தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த்தேச விடுதலை இயக்கம்
தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேச மக்கள் கட்சி
பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
குடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி
அருள்முருகன்,ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்
இயக்குநர் வ.கெளதமன், தமிழ்ப் பேரரசு கட்சி
இயக்குநர் அமீர்
இயக்குநர் ராஜுமுருகன்
ஆசிர்வாதம், மக்கள் கண்காணிப்பகம்
கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,
திரு. ஜோசப் ராஜா, காஜா மொஹிதீன், ஆம் ஆத்மி
பழ. ரகுபதி, நேர்மை மக்கள் இயக்கம்
வழக்கறிஞர் மனோகரன், அனைத்திந்திய பொதுச் செயலாளர், OPDR
வழக்கறிஞர் சுதா இராமலிங்கம்
பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு- பாண்டிச்சேரி
திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம்
ராஜா, தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கம்
புகழூர் விசுவநாதன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
கிறிஸ்டினா சாமி, அகில இந்திய துணைத் தலைவர், சுய ஆட்சி இந்தியா
ஹாரிஸ் சுல்தான், அறப்போர் இயக்கம்
உமர், மக்கள் பாதை
கிரேஸ் பானு, ஒருங்கிணைப்பாளர்,திருநர் உரிமை மீட்புக் கூட்டியக்கம்
செந்தில், இளந்தமிழகம்
தீபக், தலைவர், திசம்பர் 03 இயக்கம்
செல்வி, மனிதி
வெற்றிச்செழியன், மக்கள் அதிகாரம்,
சீராளன், பு.இ.மு.,
அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO
தோழர். சண்முகம், சாமானிய மக்கள்நலக் கட்சி
அருள், ஆ குருதி பகிர்வு இயக்கம்,
மரு. சிலம்பரசன், தமிழ்தேச குடியரசு கட்சி,
நித்தியானந்த் ஜெயராமன், சூழலியல் செயற்பாட்டாளர்
தங்கபாண்டியன், தன்னாட்சி தமிழகம்
சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
லயோலா மணி
மற்றும் பல்வேறு அமைப்புகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.
#ஒருங்கிணைப்பு: #காவிரி_ஆறு_பாதுகாப்பு_இயக்கம்
புகழூர் விசுவநாதன் - 9003867311, 9894661188
கண. குறிஞ்சி – 9443307681
வழக்கறிஞர் கென்னடி - 94430 79552