புவி மீது அனைத்து உயிரினங்களும் வாழும் உரிமை பெற்றவையே. உயர்தினையான மனிதர்களுக்குள்ளும் வேறுபாடு கூடாது. ஆண், பெண் போலவே அரவாணியும் ஒரு மனித இனமே. அவர்களும் சமமாக கருதப்பட வேண்டும். ஓர் உயிரினமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால் சமூகத்தில் அவர்கள் கேலி செய்யப்படுகின்றனர். கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுதின்றனர். உயர்தினையிலிருந்து அஃறினையாக குறைத்து மதிப்பிடப்படுகின்றனர். ஆனால் அவர்கள் நிலை என்னவென அறியச் செய்துள்ளார் வெ.முனிஷ். ’தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் பதிவு பெற்றுள்ளனர் என தேடி தந்துள்ளார். இது ஓர் ஆய்வேடு. 

இலக்கியத்திற்கு இலக்கணம் அவசியம். இலக்கணத்திலிருந்தே தன் ஆய்வைத் தொடங்கியுள்ளார். ஆணுக்கும் பெண்ணுக்கும் வகுத்த இலக்கணம் அவராணிக்கும் உண்டு என பல இலக்கண நூல்கள் மூலம் ஆய்ந்தளித்துள்ளார்.

நச்சுப் பேசலும், நல்லுரை ஓர்தலும்

அச்சு மாறியும் ஆண் பெண் ஆகியும் என திவாகர நிகண்டே அவரவாணிகளுக்கான ஒரு வரைமுறையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சூடாமணி , உரிச்சொல் நிண்டுகள் அரவாணிகளை ஊனமுற்றோர் என்கின்றன. தொல்காப்பியர் அரவாணிகளை பெண்பால் மற்றும் பலர் பாலாக வரையறுக்கிறார்.;. ஆண் தன்;மை மிகுந்த பெண்களை ஆண் அரவாணி என்றும் பெண் தன்மை மிகுந்த ஆண்களை பெண் ஆரவாணி என்றும் இருவகைகள் உள்ளனர் என்பதையும் தொல்காப்பியம் விளக்குகிறது. ஆண் அரவாணிகளைப் பேசவில்லை என்றும் கூறுகிறார். நன்னுhலோ ஆண் அரவாணியை’ஆண்பேடு’என்றும் பெண் அரவாணியை’பெண் பேடு’என்றும் வகைப்படுத்தினாலும் உயர்திiனாயயினும் அஃறினையை ஒத்ததே என்றும் வரையறுத்துள்ளது. அரவாணிகளுக்கு மதிப்பில்லை என்கிறார்.

ஆண்பால் பெண்பால் உயர்தினை என்பதும்

அலிப்பால் அஃறினை என்பதும் அழகே என அறுவகை இலக்கணம் பதிவு செய்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார். ஒன்று,பல என இருபால்களிலும் கூறலாம் என தொன்னுhலில் உள்ளது. முடிவில் இலக்கண நூல்கள் அரவாணிகளை வரையறை மட்டுமே செய்துள்ளது என்றும் வரலாறுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றன என்றும் காலங்காலமாகவே கண்டு கொள்ளப்படவில்லை என்றும் கருத்துரைத்துள்ளார். இலக்கியத்தையும் குறை கூறியுள்ளார். 

‘மரபிலக்கியங்களில் அரவாணிகள்’ இரண்டாம் பகுதி. மரபிலக்கியங்களில் அரவாணிகள் அடையாளம் காணப்படாதவர்களாகவே இருந்துள்ளனர் என்ப்துடனே தொடங்கியுள்ளார். சங்க இலக்கியத்தில் அகநானுhறு, புறநானுhறு. அறநூல்களில் திருக்குறள் ,நாலாடியார். பக்தி இலக்கியத்தில் திருவாசகம், திருமந்திரம் , திருவாய்மொழி ஆகியவற்றுள் அரவாணிகள் குறித்த பதிவுகளைத் திரட்டித் தந்துள்ளர்h. அகநானுhறில் ஒரே ஒரு பாடலில் குறிப்பு உள்ளது. அதுவும் பரத்தையோடு ஒப்பிட்டு இழிவு படுத்தப்பட்டுள்ளனர். உடல் உறுப்பு குறைபாடுடையவர்களாக கருதிய புறநானுhறு ஆணும் அல்லாததால் பெண்ணும் இல்லாததால் ஊனம் என்கிறது. திருக்குறள்’பேடி’என்கிறது என்கிறார்.’பேடி’எனில் எதிரியிடம் அஞ்சுபவன் என்னும் பொருளையும் தந்து’அரவாணி’களைக் குறிக்கின்றது என்பது பரிசீலனைக்குரியது. பிறர் மனைவிடம் செல்பவர் மறுபிறவில்’அலி’யாக பிறப்பர் என்கிறது நாலடியார். அரவாணிகள் பெண்கள் உடையணிபவர் என்ற குறி;பபும் உள்ளது.’பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க’என்று சமமாகக் கருதுகிறது திருவாசகம். சிவபெருமானையே ஆண், பெண் , அலி என மூன்றாகவும் காண்கிறது. ஆணும் பெண்ணும் கூடும் வேளை இருவர் நாசியிலும் ஒரே துளையில் மூச்சு வெளிப்பட்டால் அரவாணியே பிறக்கும் என்று திருமந்திரம் கூறுகிறது. திருவாய்மொழியோ’அர்த்தநாரிஸ்வரன்’தோற்றத்தை அலி என்கிறது. திருமால் மோகினி அவதாரம் அலியாக தோன்றியதையும் அறியச் செய்கிறது.

ஆணாகிப் பெண்ணா யலியாகி வேற்றுருவாய்

மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே என பட்டினத்தாரும் இறைவனை அரவாணியாக வழிபட்டதை பதிவு செய்துள்ளார்;. தாயுமானவரும் இறைவனாக பாடிய பாடலை ஒன்றையும் சான்றாயத் தந்துள்ளார். சங்க காலத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பக்தி இலக்கியத்தின் காலத்தில் இறைவன் நேசிப்பதாகவும் மரபிலக்கியங்களில் தோற்றம் குறித்தே பேசப்பட்டுள்ளது என்றும் வாழ்வு சார்ந்து பதிவு இல்லை என்றும் முடிவில் ஆய்ந்தளித்துள்ளார். 

அடுத்த பகுதி’காப்பியங்களில் அரவாணிகள்.’சிவப்பதிகாரத்தில் அவராணிகள் இருந்துள்ளதையும் அவர்களுக்கு என்று கூத்து நடந்துள்ளதையும் காட்டப்பட்டுள்ளது.

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்

காமன் ஆடிய பேடி ஆடலும் என்னும் வாpகள் சான்றாக உள்ளன. பின்னர் ஓரிடத்தில்’ஆரியப் பேடி’என்கிறது. மணிமேகலையோ அரவாணிகள்’நிர்வாணம் செய்தல்’என்னும் பெயரில் ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என்கிறார். கேலிக்குரியவர்களாகவும் இழிவானவர்களாகவும் அரவாணிகள் சித்தரிக்கப் பட்டுள்ளதை சீவகசிந்தாமணியில் காண முடிகிறது. கம்பராமாயணமும் இழிவாகவே கூறியுள்ளது. நீலகேசியோ

பேடி வேதனை பொp

தோடி யூரு மாதலாற்

சேடி யோடு வன்மையிற்

கூடியாவதில்லை என வேதனையை முதல் முதலாக பதிவு செய்துள்ளது. மகாபாரதமே அரவாணிகளைக் பாத்திரங்களாக படைத்துள்ளது. சிகண்டி பெண்ணாக இருந்து ஆணாகவும் அர்ச்சுனன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதையும் கண்டறிந்து தந்துள்ளார்.’சிகண்டினி’என்னும் பெண் சிவன் அருளால்’சிகண்டி’என்னும் ஆணாகி பீஷ்மரைப் போரில் கொல்வதாக கதை. அடுத்தது அர்ச்சணன்’அரவாணி’யானது. அர்ச்சுணன் மீது ஊர்வசி மையல் கொள்கிறாள். அவன் மறுக்கிறான். அதனால் ஆத்திரமுற்ற ஊர்வசி சபிக்க அரவாணியானான் என்கிறது. காப்பியிங்களில் வாழிவியல் குறித்த பதிவுகள் காணக் கிடைக்கின்றன.’அரவாணி’என்னும் சொல்லே மகாபாரதத்திலேயே உருவானது என்பதை’கூத்தாண்டவர் விழா’விரிவாக பேசியுள்ளது. போரில் ஆண்டவர்கள் வெற்றிப்பெற அர்ச்சுணனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த ’அரவான்’ஐ பலி கொடுக்க முடிவெடுக்கின்றனர். ஆனால் அதற்கு முன் அரவான் இல்லற வாழ்வை அனுபவிக்க விரும்பியதால் எந்த பெண்ணும் முன் வராததால் கிருஷ்ணனே பெண் உரு கொண்டு இல்லற சுகம் தருகிறான்.’அரவாணி’யாகிறான். பின்னா அரவான் களப்லி இடப்படுகிறான். அரவானை இழநத்தாலே கிருஷ்ணனின் வாரிசுகளாக இன்று’அரவாணி’கள் உள்ளனர் என்று அறிய முடிகிறது. 

‘நாட்டுப்புறவியலில் அரவாணிகள்’இல் புராணங்களில் அரவாணிகள் இடம் பெற்றுள்ளதை விளக்குகிறார். அரவாணிகள் குறித்த தொன்மக் கதைகளையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. டோரிசியஸ் , மாத்தாராணி கதைகளிலும் அரவாணிகள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தைக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அரவாணிகளுக்கு நல்ல மதிப்பு உள்ளதையும்’ மாத்தாராணி’யே அரவாணிகளின் குலம் தெய்மென்பதையும் கூறுகின்றன. இப்பகுதியில்’ அரவாணிகளின் பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்’ஆகியவற்றை முக்கியமாக அறியச் செய்துள்ளார். ’நிர்வாணம் செய்தல்’ பெயரில் ஆணுறுப்பு நீக்குதல், நீக்கிய நாற்பதாம் நாளில்’ அலி பட்டாபிவேக்ஷக சடங்கு’ செய்தல், ’மடி கட்டுதல்’ பெயரில் தத்தெடுத்தல் ஆகியவை பழக்க வழக்கங்களாக, சடங்குகளாக உள்ளன.நிர்வாணம் செய்து அலி பட்டாபிnக்ஷகம் செய்து கொண்டவரே மடிகட்டுதலுக்கு தகுதியுடையவராவார். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறும் விழாவே அரவாணிகளுக்கு முக்கியமானதாகும். மகாபாரத கதையையே மையமாகக் கொண்டுள்ளது. களப்பலியான’அரவான்’க்காக அரவாணிகள் விதவைத் கோலம் பூணுகின்றனர். இவ்விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். விழாவில் கலந்து கொண்டால் நல்லது நடக்கும் அரவாணியிடம் ஆசி பெற்றால் ; குழந்தை அரவாணியாக மாறாது போன்ற நம்பிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளது. அரவாணிக்களுக்கென்று சில சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளதையும் வாpசைப் படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அரவாணிகள் புறக்கணிக்கப்படுவதையும் இழிவாகக் கருதப்படுவதையுமே உணர முடிகிறது என்று முடிவில் தெரிவித்துள்ளார். 

‘இக்கால இலக்கியத்தில் அரவாணிகள்’ என்பது இத்தொகுப்பின் இறுதி அத்தியாயம்.’கோமதி’என்னும் தலைப்பில் கி.ரா. ஒரு சிறுகதையும்’ வாடா மல்லி’ என்னும் தலைப்பில் சு.சமுத்திரம் ஒரு நாவலும் அரவாணியை மையப்படுத்தி எழுதப்பட்டுளள்ன. ’கோமதி’ என்னும் தலைப்பின் மூலம் அரவாணியை பெண்பாலாகவே காட்டியுள்ளார் கி.ரா. சு.சமுத்திரமோ ’வாடா மல்லி’யென குறியீடாகக் கூறியுள்ளார். மனிதநேயத்துடன் அரவாணிகளைக் காட்டியுள்ளார். அரவணியை ’சுயம்பு’ என்கிறார். அரவாணியாவது ’இயற்கை’ என்கிறார். அரவாணியைப் பற்றிய விரிவாக எழுதப்பட்ட முதல் நாவலாகும். ’புதுக்கவிதையில் அரவாணிகள்’ பற்றிய கவிதைகளைத் தொகுத்தளித்துள்ளார்.

சந்திப்பிழை போன்ற

சந்ததிப் பிழை நாங்கள்

காலத்தின் பேரேட்டைக்

கடவுள் திருத்தட்டும் என்கிறார் நா.காமராசன். அரவாணிகள் கூற்றாகவே குரல் கொடுத்துள்ளார்.

சீந்துவார் இல்லை எனும் இழிவை மறுக்கிறேhம்

சிறுமை செய்தால் நாங்கள் மனிதராய் எதிர்க்கிறேhம் என இன்குலாப்பும் அரவாணிகள் சார்பாக பேசியுள்ளார். புதுக்கவிதை வெளி மிக விரிவானது. புதுக்கவிதையில் அரவாணிகள் குறித்து தனியே ஓர் ஆய்வு செய்யலாம். ஆனால் வெ.முனிஷ் தொடக்கத்தை மட்டுமே காட்டியுள்ளளார். தொடர்ந்து இதழ்களில் ,நாளிதழ்களில் , வார இதழ்களில் அரவாணிகள் பற்றிய செய்திகள் வெளியான விவரங்களையும் தொகுத்தளித்துள்ளார்.’இன்று அரவாணிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் மனதளவில் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்குப் பலருக்கும் தயக்கம் இருக்கவே செய்கிறது’’ என்று எழுத்தாளர் எஸ.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதியதை எடுத்துக் காட்டியுள்ளார்.

’யுனக்’என அரவாணிகள் அழைக்கப்படக் கூடாது என மயிலை பாலு கூட்டாஞ்சோறு இதழில் கோரிக்கை வைத்துள்ளார். யுனக் எனில் ஆண்குறி நீக்கப்பட்டவன். அரவாணிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அரவாணிகள் குறித்து படைப்புகள் ஏராளம் எழுதப்பட்டு வருகின்றன. இன்று அரவாணிகளே படைப்பாளிகளாகவும் இயங்கி வருகின்றனர். நாடகம் இயற்றுகின்றனர். நாடகத்தையும் இயக்குகின்றனர். திரைப்படங்களே அதிகம் பதிவு செய்துள்ளன எனினும் இழிவு படுத்தியேயுள்ளன என்கிறார். சு.சமுத்திரம் எழுதியதை வெளியிட மறுத்த நிலை தற்போது மாறியுள்ளதை அறிய முடிகிறது. நவீன இலக்கியங்களே அரவாணிகளுக்கான விடுதலையை முதலில் பேசியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

அரவாணிகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் விவாதங்களும் தற்போது உள்ளன. பரவலாகப் பேசப்பட்டும் வருகின்றனர். உடலளவில் ஆணாக இருந்தாலும் உள்ளமோ அவர்களை ஒரு பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அரவாணியைப் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முற்போக்கு சிந்தனைகள் மூலம் அவர்கள் மீது ஒருபுறம் அன்பு செலுத்தினாலும் ஆதரவு காட்டினாலும் சமூகமோ அவர்களின் மீதான மதிப்பை குறைத்தே காட்டுகிறது. பழித்தே பேசுகிறது. இழித்தே கூறுகிறது.’தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’என்னும் தொகுப்பு அத்தனைய சமூகத்திற்கு ஒரு பதிலடியாய் அமைந்துள்ளது. ஆண் , பெண் போல அரவாணியும் ஒரு மனித இனமாக மதிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும் என்கிறது. தமிழ் இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை அரவாணிகள் எவ்வாறு பதியப்பட்டுள்ளனர் என அறியச் செய்துள்ளார்.

வெ.முனிஷ் ஆய்வேடு என்னும் அளவில் அவர் பணியில், எடுத்துக் கொண்ட முயற்சியில் முழுமையாக வெற்றிப் பெற்றிருந்தாலும்’அரவாணிகள்’மீதான அவாpன் அக்கறையும் அன்பும் வெளிப்பட்டுள்ளதை இத்தொகுப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அரவாணிகள் வாழ்விலும் ஒரு முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. அர்த்த்தையும் கற்பித்துள்ளது.தலித்தியம், பெண்ணியம் போல’அரவாணியம்’பேசப்பட வேண்டும், வெற்றிப் பெற வேண்டும் என்கிறார். இறுதியில் வெ.முனிஷ் பேசப்படுவார், வெற்றிப் பெறுவார் என்னும் நம்பிக்கையளிக்கிறது. ‘எதிர்வரும் காலங்களில் அரவாணிகள் உரிமை பெறுவதற்கு இலக்கியம் முக்கியமான பங்கு வகிக்கும்’என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதற்கு’தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’என்னும் இத்தொகுப்பே ஒரு முதன்மைச் சான்று.

 வெளியீடு

ஜெயம் பதிப்பகம், வடக்குத் தெரு, கொல்லவீரம்பட்டி, வில்லூர் (அ) பேரையூர் (வ) மதுரை625707.

 விலை - ரூ.50.00

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It