மாலை இருளின்
அடர்த்தியின்மையால்
கரை ஓரங்களில் ஒதுங்கும்
பாதப்பதிவுகளில்
ஒளிந்து கொள்கிறது
கொஞ்சம் மஞ்சள் ஒளி
பாசி படர்ந்த பாறைகளின்
மோகப்பிளவுகளில் கசியும்
நிரந்தரமான குளிர்ச்சி
உப்புக்காற்றில் உருமாறி
காமத்தின் மர்ம முடிச்சுகளை
மெல்ல அசைத்து
இடைவெளிகளை
முத்தத்தால் நிரப்புகிறது
வேண்டுமட்டும்
நெடிய மௌனத்தடத்தில்
வெறும் வழிப்போக்கனாய்
கடற்கரைகளை கடந்துபோகும்
சாத்தானின் கையிருப்பில்
கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
அவன் தோட்டத்தில் அறிமுகப்படுத்தி
பிறகு பொதுவுடைமையான காமம்
- பிரேம பிரபா (