ஒளிந்து கொள்ளும்
சூரியக்கதிர்கள்
வாழ்வின் விசாலங்களை
அனுபவிக்க வருகிறது
நந்தவனச் சாமங்கள்
நட்சத்திரங்கள்
அழகாக்கப்படுகின்றன சாந்த இரவுகளில்
ஆந்தைகளின்
இரைச்சலால் அலறியடித்து
பறக்கும் சிறு குருவிகள்
தரையிலே கூச்சலிடும் ஓநாய்களால்
தூக்கம் தொலைகின்றன
அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளும்
குஞ்சுகளும்
தாயின் இறக்கைக்குள்
அடைக்கலமான குஞ்சுகள்
பதறிக்கொள்கின்றன
அந்தச் சாமங்களில்
ஓநாய்கள் உள்நுழையாத
கூடுகளுக்குள்
தன் குஞ்சுகளை பாதுகாத்ததாக
புளகாங்கிதம் கொள்ளும் தாய்க்கோழி
சர்ப்பங்களின்
சடுதியான நுழைவினை
தடுக்கமுடியாததால்
குஞ்சுகளோடு இரையாகிப் போகிறது
சர்ப்பங்களிற்கு….
அதுவும்
அந்த இரவுகளில் தான்.
- கீ.பீ.நிதுன், முல்லைத்தீவு, இலங்கை (