கீற்றில் தேட...

குறுவாளொன்று
விலாவில் செருகப்பட்டு
குறுக்குவாட்டில்
குத்திக் கிழிக்கப்பட்டது
உடல்.
வெறுமனே
வெறித்துக் கொண்டிருந்தோம்.
 
தலை துண்டிக்கப்பட்டு
சற்று தள்ளி
தனியே கிடத்தப்பட்டது.
கைபேசியில் கதை பேசியபடி
கவனித்துக் கொண்டிருந்தோம்.

பெற்றுக்கொண்ட
கறிக் கவரோடு
போய்க் கொண்டிருந்த
கார்ப் பயணத்தில்
வன்கொடுமையொன்றின்
அன்றைய தலைக்கணக்கு
வானொலிச் செய்திகளில்
பின் தொடரும் நிழலாய்.

- செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)