நேற்று முன்தினம்
அவன் சிரித்தான்
அழுதான்
மண்ணில் புரண்டான்
எழுந்து நின்று
அவ்வழி வந்த
பெண்களை வசை பேசினான் .....!
பார்த்தவர்கள் சிரித்தார்கள் ...!
பைத்தியக்காரன் என்றார்கள் ....!
நேற்று
அவன் சிரித்தான்
அழுதான்
மண்ணில் புரண்டான்
எழுந்து
கோயிலைப் பார்த்து
கடவுளை வசை பேசினான்...!
பார்த்தவர்கள் கோபமுற்று
அவனை அடித்தார்கள்...
இன்று
அவன் சிரித்தான்
அழுதான்
மண்ணில் புரண்டான்
எழுந்து
அரசியல் பிரமுகரின்
படத்தைப் பார்த்து
வசை பேசினான்
பார்த்த அவர்கள்
வெறிகொண்டார்கள்
பிறகு அவனைக் கொன்றார்கள்....!
- கலாசுரன் (