சுனைத்துவாரத்தின்
உள்ளிருக்கும்
அடர் பாசியை
தூர்த்துக்கொண்டிருந்தானவன்
மொழியற்ற வார்த்தைகள்
வெற்றுப்பிதற்றல்களாக உருமாற
வழிந்தோடும் சுனை நீரை
அள்ளிப்பருகினான்
ஆசை தீர.
வேண்டியமட்டும் தாகமும்
தணிந்தான்.
நுரைத்துப்பெருகிய
சுனை நீரின் வாயை அடைத்தவன்
தன்னை முழுவதுமாக வெளியேற்றும்போது
நிலைப்படுத்தினான்
தனக்கான உரிமையை
இனிமேல் காத்திருந்தாக வேண்டும்
சுனையும், சுவை நீரும்
அவனுக்காக மட்டுமே
அடுத்த கோடை வரை
- பிரேம பிரபா (