கீற்றில் தேட...

பள்ளிக்கூடங்கள்-உயர்
பல்கலைகழகங்கள்
சிந்தனை கூடங்கள்
சிறப்பான பாலங்கள் கட்டியவனே!-உன்
கையைகொடு

வானாளாவிய கோபுரங்கள்!
கவின்மிகு கட்டிடங்கள்!
கலைமிகு கோவில்
கருவறைகள் கட்டியவனே!-உன்
கையைகொடு!

வண்ணப்பட்டாடைகள் வனப்புறு
வடிவங்களில் தோலாடைகள்
கதராடைகள் நல்ல
கைத்தறியில் தந்தவனே -உன்
கையைகொடு!

வாழும் உயிருக்கெல்லாம் -நல்
சோறும் நீரும் கொடுத்தவனே
கலைப்பை நீ பிடித்து உலகின்
பிழைப்பை நடத்துபவனே-உன்
கையைகொடு!

உணவும், உடையும் இருக்க
இடமும் படைத்து தந்தாய்
உனக்கு நாங்கள் தந்தது
எதுமில்லை அதனால்-உன்
கையைகொடு அதற்கொரு
முத்தம் தருகிறேன்!

தியாகு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)