தவிப்பு-1முற்றிமலர்ந்த
மல்லிகையை
வண்டுதொடுவதை விட
அதை யாரோ
தட்டிப்பறிக்கையில்
மனம் கசக்கும் கண்களை....
தவிப்பு-2
யாரோ என நினைத்து
நீ என்னோடு
Phoneல்
பேசுகையில்
பேர் கேட்கமாட்டாயோ
என தவியாய் தவிக்கும்
என் மனசு...
தவிப்பு-3
தெருவோர
நாய்க்குட்டி
தாய்மடியில்
முட்டிக்கிடக்கையில்
மனமேங்கும்
தாய்தேடி....
தவிப்பு-4
வாசலில்
கிடக்கும் செருப்பு
பிச்சைக்காரரின்
தொடர் கெஞ்சல்
வேண்டுதலறுத்தது மனம்....
தவிப்பு-5
பசியெழுப்பும்
குரலில் குயிலோசை
ரயில்பயண குருட்டுப்பிச்சை
செவிடாய் பிறக்காத நான்
எனக்கும் பசி
செய்வதறியாது
சிதைகிறது மனம்...
தவிப்பு - 6
காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...
தவிப்பு-7
நல்ல மழை
கையிலிருக்கும்
குடைதடுக்கிறது
நனையத் துடிக்கும் மனதை...
- ரிஷி சேது (rishi_
கீற்றில் தேட...
தவிப்பு
- விவரங்கள்
- ரிஷி சேது
- பிரிவு: கவிதைகள்