கீற்றில் தேட...


Farmerஉனக்காக உன் சுற்றுப்புறத்தை
தூய்மைப்படுத்தினேன்
உன் கழிவுகளையெல்லாம்
அப்புறப்படுத்தினேன்
அழுக்கேறிய
உன் உடைகளை
துவைத்து சுத்தப்படுத்தினேன்.
தலைமயிரை
வெட்டிச் சிரைத்து
சீர்படுத்தி
நைந்து, பிய்ந்துப்போன
உன் செருப்பை
ஒட்டித் தைத்து
ஒழுங்குபடுத்தினேன்
உன் பசிக்காகவே
உழுதேன், விதைத்தேன்,
அறுவடையும் செய்தேன்
நீ மானங்காக்க வேண்டியே
துணியும் நெய்தேன்.

இவையாவும் உனக்காகவே
செய்தேன்
நீ எனக்காக
என்ன செய்தாய்
தீட்டென்று
ஒதுக்கியதைத்தவிர.


இலாகுபாரதி (sa_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)