
மூன்றாவது மரத்திலிருக்கும்
தம் காதல் மந்தியை
நெருங்க –
அடுத்தடுத்த மரத்திற்குத்
தாவிய வேளையில்
குலுங்கிய
மரக்கிளைகளிலிருந்து
உதிர்ந்திருக்குமோ
முதல்
காதல் கவிதை?
நீ
கண்களுக்கு
மை தீட்டும்
பென்சிலைக் கூர்தீட்டி
ஒரு கவிதை எழுதினேன்.
உன்
ஓரப்பார்வை
போலிருந்தது
அக்கவிதை
- பூங்காற்று தனசேகர்