
இருப்பவனுக்குப்
பைத்தியம் என்று
பெயர்
ஓர் இசை மெட்டில்
இயைந்து
கிடப்பவனுக்கு
இசைப் பைத்தியம்
ஆடையே
ஒரு
அவமானச் சின்னம்
இங்கு
யாருக்கோ பொருந்தும்
ஆடையை
யார் யாரோ
அணிந்து கொண்டு அலைகிறார்கள்
உள்ளம்
எப்போதும்
வெளிச்சம் விரும்புவதில்லை
அதனால் தான்
வார்த்தைகள்
நாகரிகப் போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன
இயல்பாய்
இருப்பதற்கு
இருண்மையே
- இளங்கோவன் (e_