கீற்றில் தேட...


Love
விடுமுறையில் வரும்போதெல்லாம்
கலைத்துப் போட்டுவிடுகிறாய்
வலியக் காற்றைப்போல

மூழ்கடித்து விடுகிறாய்
சந்தோஷப் பெருமழையில்
மூச்சுத் திணறிப்போகிறது ஆனந்தத்தில்

தாழ்வாரம் படுக்கையறை முற்றம்
குளியலறை சமையலறையென
எங்கும் இரைந்து கிடக்கிறதுன்
ஞாபகங்கள்

எது எப்போதெனத் தெரியா ரகஸ்யமே
உனது சுவாரஸ்யம்
கொஞ்சம் கொஞ்சமாய் முயற்சித்து
ஒழுங்குக்கு மீண்டு வரும்போது
தலைக்காட்டுகிறதுன் அடுத்த விடுமுறை



அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.