விதிவிதியின் முடிவு
வீதியில் பிணம்!
ஆதியில் ஒளவை
அணிந்துரைத்த நீதி !
கவனம்
அறிவின் கடிவாளம்
ஆற்றலின் நிதானம்
கவனம் இல்லையேல்
அவசரம், ஆத்திரம்
கோபம், குற்றம்
தண்டனை, தடைபல
காசில் கவனம்
செல்வச் செழிப்பு
கவனத்தின் நிறைவோ
கஞ்சப்படுகுழி!
கண்கள்
கல்லாமாந்தரின்
நெற்றிப் புண்கள்!
திருடனின் இஷ்ட தெய்வம்!
கல்வியின் முக்கியக் கருவி!
காதலை வளர்க்கும்
மன்மதத் தூதுவன்!
இரக்கத்தின் உச்சத்தை
இயக்கும் தலைவன்!
அழகு
சோம்பேறிகளாக முடங்கிக்
கிடத்தலையும்
முரடர்க்கு
அடங்கிக் கிடத்தலையும்
தகுதியிலாரை
வணங்கி வாழ்த்தலையும்
விடுதலே
மண்ணில் நிறைந்த அழகு!
பார்வை
இராமனின் பார்வையால்
சீதையின் காதல்
சீதலம் கொண்டது!
சீதையின் சீதலப்பார்வையால்
இராமன் வில் ஒடித்தான்
பின் அவள் கைப்பிடித்தான்!
மும்தாஜ்ஜியின் கனிவான பார்வையாலே
இன்றும்
தாஜ்மஹால் பார்க்கிறது உலகை!
திருட்டுப் பார்வை
முரட்டுப்பார்வை
தீப்பார்வை
இவைகளால் என்ன சுகம்?
- டாக்டர் மா.வீ. தியாகராசன் (
கீற்றில் தேட...
மா.வீ. தியாகராசனின் குறுங்கவிதைகள்
- விவரங்கள்
- மா.வீ. தியாகராசன்
- பிரிவு: கவிதைகள்