
மழலைப் பருவத்தில்
அம்மா என்று அழைக்க.
வாடி போடி என்பதற்கும்
கூட்டாக ஆடுவதற்கும்
பள்ளிப் பிராயத்தில்
இரண்டு தோழிகள்.
சண்டையிடவும்
அரட்டையடிக்கவும்
பள்ளிக்குப் பிந்தைய
நாட்களில் இருவர்.
கல்லூரிக் காலத்தில்
மரியாதைக்குரியவளாய்
வழிநடத்திச் செல்பவளாய்
ஒருத்தி.
வாலிபத்தை மென்று விழுங்கும்
வேலையற்ற நாட்களில்
வாய்க்காமல் போனது குறித்து
சீரணிக்க இயலவில்லை
காதல் செய்யவும்
கடுந்துயர் உரைக்கவும்
ஒரு தோழி.
- இலாகுபாரதி (sa_