கீற்றில் தேட...


Separated coupleஎங்கோ ஓர் கரையின் மடியில் -
நமக்கான
நாற்காலிகள் காத்திருக்கின்றன

எதோ ஓர் கடலின் அலைகள் -
நம்
வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது

தனக்கான வேக விளிம்பைத்தாண்டி-
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்

இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்

நா.செந்தில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.