பச்சோந்தி பெரிய ஆசான்.
Menஅதைப் பாருங்கள்.
ஒரு திசையில் செல்லும் போது தலையை
திருப்புவதேயில்லை.
அதைப்போலவே செயல்படுங்கள்.
உங்கள் வாழ்வில் ஒரு குறிக்கோளைக் கொண்டு
எதுவும் அதை திசைதிருப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பச்சோந்தி தன் தலையைத் திருப்புவதில்லை தான்.
ஆனால் கண் திருப்பும்.
மேலே நோக்கும். கீழே பார்க்கும்.

அதாவது, எல்லாவற்றையும் தெரிந்து
வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மட்டுமே இந்த பூமியில் இருப்பதாக
நினைக்காதீர்கள்.

எந்த இடத்துக்கு
வந்தாலும், அந்த இடத்துக்கு
ஏற்ப நிறம் மாறும்.
இது பச்சோந்தித்தனம் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக
இதுவேதான் சகிப்புத்தன்மை.
இதுதான் வாழும் முறையும் கூட.
ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால்
எவ்விதப் பயனும் இல்லை.
மோதலில் எவ்வித ஆக்கமும் எப்பொழுதும்
ஏற்பட்டதில்லை.
மற்றவர்களைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
நாம் வாழும் அதே வேளையில், மற்றவர்களும்
வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளப்
பழகவேண்டும்.

பச்சோந்தி நகரும்போது, ஒரு காலைத் தூக்கும்.
தடுமாறி விழாமல் இருப்பதை உறுதி செய்யும். நடக்கும்
முறையில் முன்னெச்செரிக்கை என்பது இதுதான்
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத் தாவும்போது
தன் வாலை முதலில் மாட்டும்.
தன் கால்கள் திடமாகப் பற்றிக் கொண்டால்,
தொங்கியபடியே நிற்கும்.
தன் பின்புலத்தை உறுதி செய்தல் என்பது இதன் பொருள்
எனவே எதிலும் அசட்டையாக இருக்காதீர்கள்.

இரையைக்காண நேர்ந்தால் பாய்ந்து
எடுக்க பச்சோந்தி அவசரப்படாது.
மாறாக, தன் நாக்கை மட்டும் முதலில் அனுப்பும். 
முடிந்தால், நாக்கிலேயே இரை மாட்டிக்கொள்ளும்.
இல்லையேல், நாக்கை இழுத்துக்கொண்டு
எவ்வித தீங்கும் நேராமல் தவிர்த்துக் கொள்ளும்.

எதைச் செய்தாலும் அமைதியாக செயல்படுங்கள்.
நிலைத்ததொரு செயலைச் செய்ய எண்ணி இருந்தால்
பொறுமையாக இருங்கள், அன்பாக இருங்கள்,
மனிதாபிமானத்தோடு இருங்கள்.

சரிதான்...
இனி, காட்டுக்குள் செல்லநேர்ந்தால்,
பச்சோந்தியின் பாடத்தை அறிந்தவர்களிடம்
அதனோடு பழகியவர்களிடம்
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


தமிழாக்கம்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It