
என்றுவரு வாளெனச்
சென்றநாள் முதலாய்
ஒன்றேவி நாடியுமே
சென்றிடா நீள்யுகமாய்
மின்னிணைப்பற்றிருண்ட
என்னிடத்தே தடுமாறித்
தேடினேன் தேடினேன்
சென்றாலும் என்னோடே
இருப்பேன் என்றாளை
எங்கேஎன் விளக்கென்று
இன்றும் தேடினேன்
வந்தாளென் மல்லிகை தூக்கி மாலைகொண்டாள்
தந்தாளென் சொல்லுக்குத் தாளிட்டே தன்வாயால்
வெந்தாவி இளைப்புற இறுக்கத்திற்ச் சேர்ப்பானாள்
இந்தாவித் துடிப்பிழந்தே இளைத்தேன் இத்தனை நாள்!
- அ.முத்தன், நியூயார்க் (