
நதிகளின் நீரோட்டம்
குவித்து சேமித்த
மணற்பெருக்கங்கள்
எங்கே சென்றன?
வானளாவி நிற்கும்
உயர் கட்டடங்களின்
உறுதியற்ற அடித்தளத்தில்
அமுங்கியதோ?
வடித்து வைக்கப்பட்ட
நதி படலத்தினின்றும்
அத்துமீறி
வார்க்கப்பட்டதோ?
வறண்ட நிலங்களின்
பிடிப்பற்ற பரப்பெங்கிலும்
பாகாய் தகிக்கிறது
மஞ்சற் பூமி
இயற்கை நீர்நிலைகள்
சீர்குலைத்த
மனித செயல்பாட்டால்
இன்று
தூர்த்துவிட்ட நீரூற்றுகளும்
நதிதேடி கலக்கவரும்
காட்டாற்று வெள்ளமும்
ஈரமண்ணின் ஈர்பற்று
மெல்ல
நகர்புறம் நோக்கிய
முற்றுகை துவங்கும்
ஏய்க்கப்பட்ட கடுஞ்சினத்துடன்
- விஜய்கங்கா (cv_