Picasso paintingபிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு தொலைவில்
சிக்கிக்கொண்டது
திருப்தியும் அன்பும்

பின்னமுடியாத
இழைகளில்
தவறி வீழ்ந்திருக்கிறது
முடிச்சு

எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில் ஒளிந்திருக்கிறது

அமைதியின்
அழகிய நடனத்தில்
திருப்தியுறாது
தீர்ந்து விடுகிறது
இக்கவிதையும்....

- த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.