தாங்கிக்கொள்!
நீ இட்ட திலகம் தந்தப் பேரழகின்
பெருமிதத்தில் உலாவரும் பேதை
எந்நிமிடமும் இடறக்கூடும்!
தாங்கத் தயாராகு!
தாங்கிக் கொள் நட்பே-எனைத்
தாங்கிக் கொள்!
தரமானக் கவிதை தரக்காரணமானப்
பெண்மையையெண்ணிப் பெருஞ்செருக்கில்
நடைபயிலும் நழுவும் நேரம்!
தாங்கத் தயாராகு!
தாங்கிக்கொள்! நட்பே! எனைத்
தாங்கிக் கொள்!
- அ.மல்லி. (amala_