
இதயத்துள் நுழைந்த காற்று
வெளியில் வரமறுக்கிறது
உன் கனவுகள் சுமந்த தென்றலாய்
என்னை உயிர்வாழ வைக்கிறது.
பெண்ணே!
நிலவின் குளிர்மையும்
பனியின் மெல்லிய வருடலும்
ஏன்
பூவில் வண்டமர்ந்து தேனேடுக்கும்
மென்மையை விட
உன் நினைவுகள் என்னை
மென்மையாக்கி விடுகின்றதே…
ஏன்?
நான் காத்திருக்கிறன் - ஒரு
காதலின் வருகைக்காக..
என் காதல் உன்னுடன்
ஒரு முறையேனும் வாழவேண்டும்
அலையெழுந்து கரைமோதுகையில்
எழுகின்ற நுரையின்
உயிர்வாழும் காலமாவது
நீயும் நானும் உயிர் வாழவேண்டும்
- அ.பவுலஸ்