குறை சொல்லியும்
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன
பல கோடி பாதங்கள்.
பாதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது
ஆழமானதொரு நதியைப் போல
அமைதியாக..!
புலன்களின் அனுபவச்சாயத்தை
பூசிக்கொள்ளும் பாதங்கள்
வேறு வழியின்றி
விமர்சிக்கத் தொடங்குகின்றன
பாதையினை.
பயணம் நின்றுப்போகும்
ஓர்பொழுதில்
பாதங்கள் ஆகிவிடுகின்றன
பாதையின் துளியாக...
குறைந்தபட்சம்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு ரேகையாக.!
- இப்னு ஹம்துன்