கனாவிலே
வெட்டவெளியில்
வேர்விட்டு
பூமிக்குள் பூக்கின்ற
மரம் கண்டேன்.
கரை வந்த அலைகள்
கடல் திரும்பா
நிலை கண்டேன்.
சிறகு முளைத்த
விலங்குகளும்
கொம்பு முளைத்த
பறவைகளும்
விலங்கியல் பூங்காவில்
ஊர்வலம் வந்தன.
மேற்கில் உதித்து
கிழக்கில் மறைந்தது
மாற்றம் விரும்பிய
சூரியன்.
எல்லாவற்றையும் விட
ஆச்சரியம் தந்தது... ...
சாதி அரிவாள்களின்
பயமின்றி உலவிய
காதல் இதயங்கள்
- கோவி. லெனின்