
பூ வாங்கும் கடையில்
தானாகவே நிற்கிறது
எனது வாகனம்.
நினைவுகளில்
நீ இருப்பதால்
நீ ஊரில் இல்லை
என்ற ஞாபகம்
எனக்குத்தான் இல்லை.
என் வாகனத்திற்குமா?
கொட்டிக் கிடக்கும்
கோடிப் பூக்களை
ரசிக்கவில்லை மனது
எத்தனை மலர்கள்...
எத்தனை நிறங்கள்...
அத்தனை பூக்களும்
அழுவது போலவே
இருக்கிறது.
பூக்கள் மீண்டும்
சிரிக்க வேண்டும்
உடனே
ஊர் திரும்பி வா!
- கோவி. லெனின்