முதல் முத்தத்தை உனக்களித்தேன்

கண்ணோடு கண் நோக்கி
கன்னத்தில் கன்னம் இழந்தேன்
சிலும்பி இருக்கும் உன் தலைமுடி வருடி
சீராய் இருக்க என் விரலால் கோதினேன்
தூரத்தில் நின்றும் அருகினில் வந்தும்
உன் அழகை ரசித்தேன்
விரும்பி கேட்ட நம் உறவினருக்கு
விட்டுக் கொடுக்க மறுத்து
உனக்காக பகையாளியானேன்
புகைப்படத்தில் உன்னுடன் சேர்ந்திருப்பதில்
புன்னகையுடன் பெருமிதமடைந்தேன்.
இவ்வளவு செய்தும்...
என் மடியில் கிடத்தி
மனதார கொஞ்சும் பொழுதில் கூட
உன் கன்னி மழலையில்
வவ் என்று குரைக்கமாட்டாய்
முன்னங்கால் நீட்டி நீட்டி
சண்டையிடுவதோ
கிரில் கதவில் முகம் நுழைத்து
குரைத்தது தீர்ப்பதோ
உன்னால் முடியாது - ஒழியட்டும்
வீட்டையும் பாதுகாக்க இயலாது . . .
அதையும் ஏற்றுக் கொள்கிறேன் . . .ஆனாலும். . .
உயிர்ப்புள்ளதை வளர்க்க
இடமில்லையென்று தானே
உன்னை வாங்கினேன் !
என்னைப் பார்த்ததும் உன்
சின்ன வாலைக் கொஞ்சமேனும்
ஆட்டக்கூடாதா?
இதான் உன் நன்றியா?. . . .
என் பொம்மை குட்டிநாயே.
- பதமப்பிரியா (