
கைத்தட்டத்தானா உன் கை? - தமிழா!
கைத்தட்டத்தானா உன் கை
வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை ?
ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைத்தாய்!
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!
என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?
கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு ? - அட !
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?