
வயது 58
மிகப்பெரிய கொடியை
எல்லா துணி ஆலைகளும்
நெய்தன
சாக்லேட் காகிதம் கூட
மூவண்ணத்தில்
சுதந்திரத்திற்காக போராடியவர்கள்
சிலைகளாய்
சாலையின் நடுவே
காந்திஜி
நேதாஜி
அம்பேத்கர்
என சிலைகள்
பீடமாய் அவர்களது
சொற்கள்
ஆண்டு முழுவதும்
விடுதலை எண்ணம்
விதை தூவப்பட்டது
ஒளிச்சேர்க்கை மாதிரி
விடுதலை உணர்வு
வீசப்பட்டது
எனக்குச் சிலையாய்
நிற்க எண்ணமில்லை
கொடியாய் பறக்க
விருப்பமில்லை
கொடி தாங்கும் சிறுவனுக்கும்
சிலையெழுப்பும் கொத்தனாருக்கும்
உரிய சுதந்திரம் கிடைக்கும்வரை
- இளங்கோ (e_