ஜெயபாஸ்கரன்

நேர வாடகை
ஏறக்குறைய
எழுபதாயிரம் ரூபாய் வரை
உங்களுக்கு.
பத்து வினாடிகளுக்கு
விளம்பரக் கட்டணம்
பத்தாயிரம் ரூபாய் வரை
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு.
கால்ஷீட்டுக் கணக்கில்
நூறு ரூபாயில் தொடங்கி
ஏதோ ஒரு தொகை
நிச்சயம் உண்டு
நடிகர்களுக்கும்,
தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்
கருவிகளுக்கும்.
மின்சார செலவு
நேர விரயம் ஆகியவற்றோடு
மாதந்தோறும் நாங்கள்
வேண்டி விரும்பித் தரும்
நூற்றைம்பது ரூபாய்
கேபிள் டி.வி.காரர்களுக்கு.
இருந்தும்
அரை மணிக்கு ஒரு தரம்
குரலெடுத்துக் கூவுகிறீர்கள்
இது உங்கள்... டி.வி... என்று.
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_