
கரைந்து போனது மாலையே
நேற்று பெற்ற சம்பளம்
கன்னக்கோலிட்டு
களவாட வந்தவர்கள்
மற்றவர்கள் முந்திக்கொண்ட
ஆத்திரத்தில்
விளாசிவிட்டனர் இரவில்
வெற்றாளாய் நின்ற என்னை
புகாரிட
“கவனிப்புக்கும்”
காசில்லை
இவர்களெல்லோரும்
தங்களுக்கு
தெரிந்தவர்களும்
வேண்டியவர்களும்தானே
சொல்லிவையுங்கள்
மாதாமாதம் கொடுப்பதை
அன்று மாலையே நீங்கள்
பறித்துக் கொள்வதை
அடிபடுவதாவது மிஞ்சும்.
- ஆதவன் தீட்சண்யா (