நிறைவேறாமல் இருக்கிறது

அதை
ஒதுக்கிவைத்துப் பார்க்க
ஆசைப்படுகிறேன்
அடுத்தமுறையில் என்று
சமாதானம் கூறிக்கொண்டு
சவாரி செய்துவிடுகிறேன்
நிழலை நிஜமாக்கிவிடுகிறது
நிஜம் நிழலாகிவிடுகிறது
முழுமையாய் அதை இன்னும்
முறைப்படுத்திக்கொள்ளவில்லை
அந்த நதியைத்தாண்டாமல்
ஆயிரம் நிகழ்ந்துமென்ன?
எதிர்பார்ப்புகளால் நிறைந்த
குடத்தைக் காலிசெய்வதாகவே
என் வேள்வி நீள்கிறது
வேள்வியின் விளிம்பில்
அது என்னை வரவேற்கலாம்!
அந்தத் தளத்தில்
நான்
அடியெடுத்து வைக்கலாம்!
அங்கிருந்து என்
பரிசுத்த தாகம் தீர்க்கப்படலாம்
அதற்கானப் பயணம்
நிகழலாம்
அதுவரை
அதனுடன்
ஊடும் பாவுமாக
உலாத்தலைத்தான் மகுடச்சொற்களால்
முடிசூட்டிக்கொள்கிறேன்
- பிச்சினிக்காடு இளங்கோ (