கீற்றில் தேட...


Loveவன்முறையும்
வெடிகுண்டுமே
இன்றைய பண்பாடு

சம்பாதிப்பதும்
நுகர்வதுமே
தினசரி நடவடிக்கைகள்

அன்பு பக்தி
பாசம் நேசம்
எல்லாம்
இருந்ததாக காண்பிக்கப்படுகின்றன
பழைய படங்களில்

உயிரோடு நடமாடும்
இயந்திரங்களுக்கு
தினங்கள் தேவைதான்
விலையுயர்ந்த பொருளோடு
அன்பை
விலைபேசுவதற்கு 

அரவிந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)