கூரைபிய்க்கும் அடைமழையிடம்
புரியவைக்க போராடுகிறது
சேரிச் சிறுமியின் முனகல்
சப்தம்..

வெள்ளமென பெருக்கெடுத்து
அழித்துப்போனது அவளின் ஓட்டுவீடு
கனவுகளை...
விடியலில் முள்செடியொன்றில்
காய்ந்துகொண்டிருந்தது அச்சிறுமியின்
சடலம்.
சொல்லமுடியாத வலிகளை
காற்றில் எழுதிப் பறக்கிறது
ஒற்றைக்குயிலொன்று.
இலையுதிர்காலத்தின்
கடைசி இலை சத்தமின்றி
மெதுவாய் உதிர்கிறது
சேரிச் சிறுமியின் கேட்கப்படாத
முனகலென.
- நிலாரசிகன் (