இயலாமையின்
வெப்பத்திலிருந்து கசிகிறது
தான்மை
உடைபட்ட கொப்புளத்தின்
சீழினைப் போல.
எல்லாமறிந்தவனென்னும்
போர்வையை
இழுத்துப் போர்த்திக் கொள்ள
இழித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது
ஏதேனும் அறிந்தவர்களை.
அங்கத இலக்கியத்தில்
தஞ்சமடைந்த படி
காழ்ப்பு மனம்
தன் குரூரத்தின்
பற்களில்
ஒழுகும் குருதி துடைக்கிறது.
நேற்றைய மன்னர்களின்
சமாதிகளைத் தோண்டியெடுத்து
தனக்கான
நாளைய வீதிகளை
சமைத்துக்கொள்ளத்துடிக்கிறது
தற்கிலி குணம்.
எழுதின் மேல் கவியும்
நோயறிவால்
இருண்டு விடுகிறது
எழுதுகோல்களின் சுய வெளிச்சமும்.!
- இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தற்சார்பு மிக்க கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்குத் தேவை
- புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்
- சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம்
- திராவிடம்... திராவிடர்… - 3
- கொசுக்களைக் கவரும் சோப்புகள்
- உதிரும் இலை
- குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா?
- தமிழ்நாடு ஜூன் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- திமுக அரசு செய்தாக வேண்டிய மூன்று பெரும் பணிகள்
- இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி இழப்பு எழுப்பும் கேள்விகள்
- விவரங்கள்
- இப்னு ஹம்துன்
- பிரிவு: கவிதைகள்