
கன்னம் வைத்துக் காதில்
கவிதை சொன்னேன்
கள்வர் வருவார் கவனமடி
காவல் காக்கப் போகும் வேளை
கரும்பாதச் சத்தங்கள் உன்
காதுகளுக்குள் இனிமையான
கானங்களாக நடனமிடும்
கண்டுகொள்ளாதே...
காதலால் வசப்பட்ட என்னைக்
கள்வர்கள் திருடிய போதும்
எந்தன்
கனத்த இதயத்தின் அலறல்கள்
கண்மணி உன் செவிகளில்
கதைபேசும்…அப்போது
கண்டுகொள் என்னை மட்டும்..
கனவுகளாய் இருந்த காலங்களில்
கள்ளச் சிரிப்புடன் உலாவும்
அந்தக் காக்கைக் கூட்டம்
உன்னையும்
கட்டாயமாகக் களவாடிக்கொள்ளும்..
கண்மணியே அதுவரை காத்திராது
களமிறங்கிக்கொள்… உன்
காதலிதயத்தில் எந்தன்
தாகத்தையும் கவனமாகத்
தைத்துவவைத்துக்கொள்…
களமிறங்கி என்னைக் களவாடிய
அந்தக் கள்வரின் கைகளைத்
துண்டாக்கிக்கொள்...
- ஆல்பர்ட் (