dotதூரத்தில் தங்கி
தயங்கி நிற்கும்
நிலா!

அவளின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டு!

என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக் குறித்தாலும்
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளி!

வெறும் புள்ளி!

ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!


- ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.