கடைசியாய்..
வாழ்ந்த வாழ்வின் நினைவலைகள்.
வளமான காலங்கள்..
வருத்திய சோகங்கள்..
வந்து போன வசந்தங்கள்...
எல்லாம் முடிந்தது..
இதோ
ஆயுதங்கள் தயார்.
ஆட்களும் தயார்
உயிர் பிரியும் வலியுடன்
சிரித்தபடி மரித்தது
வெட்டுபவன் வார்த்தைகள் கேட்டு
"ச்சே என்ன வெயில் என்ன வெயில்"
- விழியன்