கீற்றில் தேட...


மல்லாக்க படுத்துக்கொண்டு
எச்சில் துப்புகிறது
சில கூட்டம்

ஒலிநாடா, படநாடா
குறுந்தகடு, செய்தித்தாள்
தொலைக்காட்சியென
அனைத்து ஊடகங்களும்
அறிவற்று
பயன்படுகின்றன அதற்கு

இவர்களுக்கெதிராக
அவர்களும்
அவர்களுக்கெதிராக
இவர்களுமென
மாறி மாறி மாறி
ஒட்டிக்கொண்ட
சுவரொட்டிகள் சொல்லுமோ

ஒற்றுமையெனும் கயிற்றின்(குரான்)
இரு முனைகளும்
இழுக்க இழுக்க
அறுந்துதான் போகுமென்று

வெட்கத்தை வித்ததால்
நிறைய எச்சில் தழும்புகள்
இந்த கூட்டங்களின் முகத்தில்

இன்றும் தனக்குதானே
துப்பிக்கொண்டு தானிருகின்றன
மல்லாக்கப் படுத்துக்கொண்டு

உலகம் துப்புவதை நிறுத்திக்கொண்டது. 

கவிமதி, துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.