
வருடுகின்றன என் வீட்டு மாமரக்கொழுந்துகள்
உன் இதழ்களாய் பூத்து சிரிக்கின்றன
என் வீட்டு செம்பருத்திகள்
குளித்து முடித்து ஈரம் சொட்டும் உன்
கூந்தலாய்ப் பொழிகிறது கார்முகில்
மேகம் கலைந்த வானத்தில்
உன் முகமாய் சிரிக்கிறது நிலா
பறிக்காமல் விட்ட அரளிப் பூ விதையாய்
கசக்கிறது உன் பிரிவு
- குமரேஷ் பொறையார் (