தேர்ந்த கலைஞனைப் போல்
வலைபின்னியிருக்கிறது சிலந்தி
அதன் பலமணி நேர உழைப்பை
ஒரு ஒட்டடை குச்சியின்
உதவியுடன்
பிரித்துப் போட
வந்து கொண்டிருக்கிறது
பண்டிகை திருநாள்
பண்டிகை கொண்டாட்டங்கள்
மகிழ்ச்சியோடு நகரும் வேளையில்
தப்பிய சில சிலந்திகள்
தொடரக்கூடும்
இன்னொரு மூலையில்
தன் உழைப்பை.
-ஆ.மீ. ஜவஹர் (