என்
கவனம் ஈர்ப்பதற்காகவே
குரலுயர்த்திப் பேசி வருவாய்
உன் தோழிகளோடு!
என் பார்வை பட்டதும்
நீ அடங்கி விடுவாய்
உன் வெட்கங்கள் கத்திப் பேச ஆரம்பித்துவிடும்!
------------------------
இடை இடையே
நீ பார்க்கும் சிறு சிறு பார்வைகளுக்கு
வலுக்கட்டாயமாக
என்னில்
சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்
கொண்டு வரப்படுகின்றன!
உன்
நெற்றியின் பக்கவாட்டில்
கட்டவிழ்க்கப்பட்ட சில மயிரிழைகள்
உன்
காதோரம் சொருகி விடப்பட்டதும்
மீண்டும் கட்டவிழ்க்கப்படுகிறது காதல்!
- துரை @ சதிஷ், பாண்டிச்சேரி (