என்னை மாற்றிக்கொண்டேன்...
ஏதாவது ஒரு மாறுதலின் போதாவது...
என்னை...
பிடிக்கும் என்று நம்பி...
இலையாய் மாறினேன்...
என்னை மிதித்து விட்டீர்கள்
பூவாய் மாறினேன்...
என்னை கசக்கி விட்டீர்கள்
காயாய் மாறினேன்...
ஏன் முகம் சுழிக்கிறீர்கள்...
துவர்க்கிறேனா?
கனியாய் மாறினேன்...
இம்முறையும் என்னை உமிழ்ந்து விட்டீர்கள்...
புளித்துவிட்டேனா?
கடைசியாய்...
வேராய் மாறினேன்...
அய்யோ... என்னை முழுதாய்...
வெட்டிச்சாய்த்து விட்டீர்களே...
எதுவாக மாறி வந்தால் ...
தங்களுக்கு பிடிக்கும் ?...
சொல்வீர்களா...?
- அனாமிகா பிரித்திமா (