கழிவிரக்கம் கதவுதாண்டி வழிந்தோடிய
ஒரு மதியப்பொழுதொன்றில்தான்
அந்தப் பெட்டியை கிளறத்தொடங்கினேன்.
தேவையில்லையென சொல்லிக்கொண்ட
பழைய கடிதங்கள், குறிப்பேடுகள்,
வாழ்த்துஅட்டைகள், சிலரேகைகள் கொண்ட
காகிதங்கள் நிரம்பிய பழையப்பெட்டி அது.
ஒரு கடிதத்தை கையிலெடுத்தேன்
அனுப்புனர் பெயரைப் படித்ததும்
கடிதம் புகையாய் கரைந்து
உருவமாய் நின்று
காட்சி ஒன்றை நிகழ்த்தத் தொடங்கியது
நேரம் ஆக ஆக
நிறைய உருவங்கள்
நிறைய நாடங்கங்கள்
சில குறுக்குவெட்டுகள்
எல்லாவற்றிலும் மையகதாப்பாத்திரம் நானே!
எல்லா உருவங்களையும்
அதனதன் இருப்பில் நடிக்கவிட்டு
என் போக்கில்
அறையிலிருந்து வெளியேறினேன்.
அந்த நாளில் இருந்துதான்
எழுத்துக்களை கிழித்தெறியும்
வன்முறையைக் கற்றுக்கொண்டேன்!
- ஜனா.கே (